இது பல்லாயிரம் ஆண்டுகளாக நாட்டுபுற கதையாக புழங்கியுள்ளது. வால்மிகிக்கு முன்பே பல இராமாயணங்கள் வந்துள்ளன! அந்தந்த மண்ணிற்கும், மதங்களுக்கும் ஏற்ப இராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன! ”அய்யய்யோ… இதென்ன..?” என அலறும்படிக்கு ஒன்றுக்கு ஒன்று ஏகப்பட்ட முரண்பாடுகளுடன் அசரடிக்கின்றன! ஒன்று, இரண்டல்ல முந்நூறுக்கும் அதிகமான இராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன என்பதே வியப்பான செய்தி தான்! இதை அறிமுகப்படுத்தும் வண்ணம். “முந்நூறு இராமாயணங்கள்” என்பதையே தலைப்பாகக் கொண்டு ஏ.கே.ராமானுஜன் ஆங்கிலத்தில் எழுதி நூல் உள்ளார் . அதன் தமிழ் மொழிபெயர்ப்பு ந.வினோத் குமார். மொழிபெயர்ப்பு தான் நம்மை மூலத்துடன் நெருக்கமாக ...