மென்மையான காதல் கதையை  ராணுவப் பின்னணியில் அழகாகவும், இதமாகவும் தந்துள்ளார் இயக்குனர் ஹனு ராகவபுடி. துல்கர், மிருணால் நடிப்பில் இளமையும், இனிமையும் பொங்கி வழிகிறது!  இந்தியா-  பாகிஸ்தான், காஷ்மீர் சிக்கலை பின்னணியாகக் கொண்ட, மிக அற்புதமான காதல் காவியம்! சண்டைக்காட்சிகள், பிரம்மாண்டம், டூயட், அடிதடி என்பதான தெலுங்கு இண்டஸ்டிரியில் இருந்து மாறுப்பட்ட  இனிமையான, இதமான படமாக வந்துள்ள சீதாராமம், தமிழ் உள்ளிட்ட அனைத்து தென் இந்திய மொழிகளிலும் வெளியாகி உள்ளது. எளிய காதல் கதையை பரபரப்பான விறுவிறுப்பான ஆக்‌ஷன் படமாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.  ...

இது பல்லாயிரம் ஆண்டுகளாக நாட்டுபுற கதையாக புழங்கியுள்ளது. வால்மிகிக்கு முன்பே பல இராமாயணங்கள் வந்துள்ளன! அந்தந்த மண்ணிற்கும், மதங்களுக்கும் ஏற்ப இராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன! ”அய்யய்யோ… இதென்ன..?” என அலறும்படிக்கு ஒன்றுக்கு ஒன்று ஏகப்பட்ட முரண்பாடுகளுடன் அசரடிக்கின்றன! ஒன்று, இரண்டல்ல முந்நூறுக்கும் அதிகமான இராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன என்பதே வியப்பான செய்தி தான்! இதை அறிமுகப்படுத்தும் வண்ணம். “முந்நூறு இராமாயணங்கள்” என்பதையே  தலைப்பாகக் கொண்டு  ஏ.கே.ராமானுஜன் ஆங்கிலத்தில் எழுதி நூல் உள்ளார் . அதன் தமிழ் மொழிபெயர்ப்பு ந.வினோத் குமார். மொழிபெயர்ப்பு தான் நம்மை மூலத்துடன் நெருக்கமாக ...

மீரான் மைதீன்  எழுதியிருக்கும் புதிய நாவல் ‘ஒச்சை’. கன்னியாகுமரி மாவட்டத்தின், ஏதோ ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை மிக உயிர்ப்புடன் எழுதியுள்ளார்! ஒச்சை என்று சொல்லுக்கு இரைச்சல் என்று பொருள். வளைகுடாவில் பணிபுரியும் மாந்தர்களை  ‘அஜ்னபி’ நாவலில் காட்சிப்படுத்தியவர் மீரான் மைதீன். அவருடைய உரையாடலும், பாத்திரங்களின் சித்தரிப்பும், எள்ளலும் இந்த புதிய நாவலிலும் தொடர்கிறது. யாராலும் புறக்கணிக்க முடியாத இடத்தை தமிழ் இலக்கிய உலகில் பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். ‘ஒச்சை’ கதையின் நாயகன் கோயா. ஆனால் கோயாவின் நிஜப்பெயர் நூர்தீனோ அல்லது கமர்தீனோ. ‘ஏகதேசம் ...