பாஜக தலைமையின் அம்பு தான் கவர்னர். போராட்ட உணர்வும், அஞ்சாமையும் இருந்தால் மட்டுமே பாஜகவின் பாஸிச அரசியலை எதிர் கொள்ள முடியும். இதே பாஜக கவர்னர்கள் மேற்கு வங்கத்திலும், தெலுங்கானாவிலும்,டெல்லியிலும் எப்படி தள்ளாடுகிறார்கள் என ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் ஒரு விஷயத்தை நன்கு மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது! அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்பது சுயேட்சையாக செயல்பட முடியாத ஒரு அமைப்பு! அதன் ஒவ்வொரு நகர்வையும், செயல்பாட்டையும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் தான் தீர்மானிக்கிறார். தற்போதைய ...
பெரும்பான்மை மக்களும், அனைத்து கட்சிகளும் நீட் விலக்கு கேட்டாலும், அதை ஒற்றை மனிதனாக தடுக்க முடியும் என்றால், ஒன்றிய அரசின் காலனியாதிக்கத்தின் கீழ் தமிழகம் உள்ளதா..? ஆடம்பர மாளிகை, அளவில்லா சலுகைகள்,செலவுகள்.. கவர்னருக்கு எதற்காக..? நீட் தேர்வை தமிழகத்தில் திணிக்கக் கூடாது என இன்று தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், பாஜக நீங்கலாக வலியுறுத்தி உள்ளன! நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானது மாநில உரிமையும்,சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரமும் தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது. ஆக, நீட் ...