குழந்தை பெற்றுக்கொள்வது என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமையா..? ‘அவள் உடல் அவள் உரிமை’. என்பதை சமூகம் ஏற்கிறதா..? குழந்தை பெற்றுக் கொள்வதோ, மறுப்பதோ அல்லது தள்ளிப் போடுவதோ அவள் மட்டுமே எடுக்க முடிந்த முடிவா..? இதைப் பற்றி மிக இயல்பாக இந்தப் படம் விவாதிக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஜாது அந்தாணி ஜோசப் சிக்கலான இந்தக் கதையினை மிக நேர்த்தியுடன் சுவாரசியமான படைப்பாக்கி இருக்கிறார் ‘மலையாளப் படத்தை நம்பிப் பார்க்கலாம். படத்தில ஒண்ணுமே இல்லைனாலும் இரண்டு மணி நேரம் ஓடிவிடும் ‘ – என்று ...