தமிழ் நாட்டில் தேவைக்கும் அதிகமான நவீன வெப்செட், ஆப்செட் அச்சகங்கள் இருக்க, அண்டை மாநிலங்களுக்கு  பல்லாயிரம் டன்கள் பாட நூல்கள் அச்சடிக்கும் ஆர்டர் தரப்படுவது ஏன்? ஆந்திராவுக்கு முதல் ஆர்டர் தரப்பட்டுவிட்டது. பாடநூல் அச்சிடுவோர் வேதனை! புத்தகம் அச்சிடுவோர் மற்றும் பைண்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் மோசஸ், பிரேம்குமார் ,விநாயகம், பாடநூல் அச்சிடுவோர் நலச்சங்க  நிர்வாகிகள் உதயகுமார் ,குமரேசன் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  இன்று கூட்டாக  பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியது: “தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பாட நூல்களையும் அச்சடித்து ...