பாடப் புத்தகங்களில் உள்ள மிக முக்கிய தலைவர்கள், தமிழின் ஆளுமைகளை சாதி பின்னொட்டுடன் குறிப்பிட்ட வழக்கம் பல காலமாகவே தொடர்ந்துள்ளது. பெயருக்கு பின்னால் உள்ள சாதி பின்னொட்டை தூக்கி எறியும் செயலை சுதந்திர போராட்ட காலத்திலேயே பெரியார் செய்துவிட்டார். அவரைப் போலவே பல்வேறு தலைவர்களும் செய்தனர். சுதந்திர போராட்ட காலத்திலும், திராவிட மறுமலர்ச்சி தோன்றி பெருவெள்ளமென பாய்ந்த காலகட்டத்திலும் சாதி அடையாளத் துறப்பு இயல்பாகவே நடந்தேறியது. பொதுவுடமை சித்தாந்த இயக்கங்களிலும், தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் சாதி அடையாளத் துறப்பு மிக இயல்பாக இருந்ததை கண் ...