தனியார் பள்ளிகள் என்பவை மிகப் பெரிய கேள்விக்கு அப்பாற்ப்பட்ட அதிகாரமையங்களானதில் தொடங்குகிறது இந்த மாதிரியான பிரச்சினைகளின் மூலம்! பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் (59) இப்போது தான் வெளியில் தெரிய வந்து மாட்டியுள்ளார். பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை தந்த இது போன்ற சம்பவங்களின் பின்னணி என்ன..? ஆக, இந்த முதிய வயசிலேயே – தன் மகளாகவோ, பேத்தியாகவோ கருத வேண்டிய பெண் குழந்தைகளிடம் இந்த ஆட்டம் போட்டிருக்கிறார் என்றால், இத்தனை ஆண்டுகளில் என்னென்னவெள்ளாம் செய்திருப்பார் ராஜகோபாலன்? எத்தனை குழந்தைகள் அதற்கு பலியாகி சொல்ல ...