இன்றைய தினம் இயற்கைக்கு இணையாக வேகமாக அழிக்கப்பட்டு வருவது தாய் மொழிகளே! உலகில் ஒவ்வொரு ஆண்டும் பல தாய்மொழிகள் பேசுவாரை இழந்து காணாமல் போகின்றன! அதிகாரத்தையும், நவீன தொழில் நுட்பங்களையும், ஒற்றுமையையும் சாத்தியப்படுத்த தவறும் மொழிகள் சாகின்றன! உலகில் 6,000 மொழிகள் இருந்தாலும் 96 சதவிகித மக்கள் 240 மொழிகளுக்குள் வந்து விடுகின்றனர். சில ஆயிரம் மக்களாலும், சில லட்சம் மக்களாலும் பேசப்படும் மொழிகள் 5,000 க்கு மேற்பட்ட மொழிகள் இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. அந்த ...