சமூகத்தின் அடித்தள மக்களான மக்கள் நலப் பணியாளர்கள், திமுக ஆட்சியில் வேலைக்கு அமர்த்தப்படுவதும், அதிமுக ஆட்சியில் நீக்கப்படுவதுமாக 30 ஆண்டுகள் இழுத்தடிப்பில், வேலை இழந்து பட்ட துயர் சொல்லி மாளாது! சுமார் 200 பேர் வரை மன உளைச்சலில் தற்கொலை செய்துள்ளனர்! செப்டம்பர் 1989-ல், அன்றைய திமுக ஆட்சியில் ஊரகப்பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், கிராம பொதுச் சொத்துகளைப் பேணிக் காத்திடல், சிறு சேமிப்பு திட்டத்திற்கு உதவுதல் போன்ற கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக  ஒரு ஊராட்சிக்கு ஒரு ஆண் மற்றும் ...

சொர்க்கலோகம் என்பது இது தானா? என்று மிரளக்கூடிய சகல ஆடம்பர வசதிகளுடன் சமூகத்தின் பெரிய கோடீஸ்வரர்கள்,செல்வாக்கானவர்களைக் கொண்டது ஜிம்கானா கிளப்! ‘எத்தனை பெரிய மனிதர்களுக்கு எத்தனை சிறிய மனம்..!’ என்கிற ரீதியில், இங்கு தொழிலாளர்கள் படும்பாட்டைக் கேட்டால்…! நீதியரசர் அரிபரந்தாமன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து சென்ற ஒரே காரணத்திற்காக இந்த கிளப் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போதுதான் முதன்முதலாக “ஜிம்கானா கிளப்” பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்தால்.. விரட்டுவீர்களோ..என ...

இன்றைய தினம் இயற்கைக்கு இணையாக வேகமாக அழிக்கப்பட்டு வருவது தாய் மொழிகளே! உலகில் ஒவ்வொரு ஆண்டும் பல தாய்மொழிகள் பேசுவாரை இழந்து காணாமல் போகின்றன! அதிகாரத்தையும், நவீன தொழில் நுட்பங்களையும், ஒற்றுமையையும் சாத்தியப்படுத்த தவறும் மொழிகள் சாகின்றன! உலகில் 6,000 மொழிகள் இருந்தாலும் 96 சதவிகித மக்கள் 240 மொழிகளுக்குள் வந்து விடுகின்றனர். சில ஆயிரம் மக்களாலும், சில லட்சம் மக்களாலும் பேசப்படும் மொழிகள் 5,000 க்கு மேற்பட்ட மொழிகள் இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. அந்த ...

எந்த ஒரு எம்.பியானாலும், மக்கள் நலத் திட்டங்களை மாநிலஅரசின் ஒத்துழைப்புடன் தான் செய்ய முடியும்! மாநில அரசு என்றால், மாவட்ட ஆட்சியர் வழியாகத்தான் மக்களுக்கு நன்மைகளை கொண்டு சேர்க்க முடியும்! ஜோதிமணி அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படும் ஒரு சமூக செயல்பாட்டாளர்! கரூர் எம்.பி தொகுதியில் சுமார் 10,000 மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான உபகரணங்களை கேட்டு காத்துள்ளனர். இந்த நிலையில் மாநில அரசால் மட்டுமே இந்த தேவைகளை நிறைவு செய்துவிட முடியாது! ஆகவே, அவர் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் ...