அல்வாவிற்கு பேர் போனது திருநெல்வேலி! ஆனால், அந்த திருநெல்வேலியையே அல்வா துண்டுகள் போல வெட்டி விழுங்கிவருகிறார்கள் கல்குவாரி முதலாளிகள்! ஆளும் கட்சியின் எம்.பி ஒருவரே இதற்கு அனுசரணையாக இருப்பது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது..! மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவிற்கு கிடைத்த கொடை எனலாம். பசுமை மாறாக் காடுகளும் அரிய வகை உயிரினங்களும் இங்கு ஏராளமாக உள்ளன. நர்மதை, தபதி நதிகளை தவிர மற்ற தென்னிந்திய நதிகள் அனைத்துக்கும் இதுதான் பிறப்பிடம். தமிழ்நாட்டின் ஜீவாதார நதிகளான காவிரி, வைகை ,தாமிரபரணி போன்றவற்றிற்கு தாய்மடி இம்மலைதான். தொன்மையும் ...