உணவகம் என்பது மனசாட்சியில்லாத ஒரு வர்த்தகமாக வலுப் பெற்றுள்ள இந்த காலகட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வாய்த்தது தான் அம்மா உணவகம்! ஆனால், அரசியல் தலையீடுகள், அலட்சியங்கள், அதிகார அழுத்தங்கள், சமாளிக்க முடியாத நஷ்டம் மற்றும் பெயர் அரசியல் ஆகிவற்றால் தடுமாறுகின்றன. அம்மா உணவகம் குறித்த பெயர் அரசியல் உள்ளார்ந்த வகையில் தற்போது ஓடிக் கொண்டுள்ளது! இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்! உண்மையில் இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்ட போது – அதாவது மார்ச்- 19,2013 ல் மாநகராட்சி மலிவு விலை ...