கலவரத்திற்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத அப்பாவிகள் கண்மூடித்தனமாக கைதாகி உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட  இளைஞர்களின் பெற்றோர் சென்னை வந்து டிஜிபி அலுவலக வாசலில் கதறி அழுததை பார்த்துக் கொண்டே காரில் சென்றார் முதல்- அமைச்சர் ஸ்டாலின். அப்பாவி இளைஞர்கள் கைதில் அரசின் நிலை என்ன? கள்ளக்குறிச்சி, சக்தி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ஸ்ரீமதியின்  சந்தேக மரணச் சம்பவமும் அதைத்தொடர்ந்து பள்ளி மீதான தாக்குதல் சம்பவமும் இவற்றின் மீது போலீசார் எடுத்த நடவடிக்கைகளும் தமிழக அரசின் காவல்துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தத் தவறுகளில் ...

கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன் திரண்டு கதறி அழுகின்றனர். வேலைக்கு சென்று திரும்பியவர்களை, கல்லூரி மாணவர்களை, கடை வீதிக்கு சென்றவர்களை பொய் வழக்கில் கைது செய்து பொய் வழக்கு போட்டது அம்பலம்! ஆனால், இது தொடர்பாக களத்தில் இறங்கி முக்கிய ஊடகங்கள் உண்மைகளை வெளிக் கொணராமல் ஊமையாக உள்ளனர். பாலிமார் தொலைகாட்சி மட்டும் அப்பாவிகளின் பெற்றோர் குமுறலை ஒரே ஒரு முறை மேலோட்டமாக காண்பித்தது! கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை அடுத்து ...