கிராம சபைகள் தங்கள் விருப்பத்திற்கு கூட முடியாதாம்! அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் இயங்க வேண்டுமாம்! கிராம சபை  தீர்மானங்களை அரசு பொருட்படுத்தாதாம்! இப்படி எண்ணற்ற வகைகளில் உள்ளாட்சிகளை ஊனப்படுத்தி, 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை நடத்த மறுத்தவர் இன்று உள்ளாட்சிகளை கூட்டி உபதேசிப்பதை பார்ப்போமா?: தேனில் ஊறிய பலா பழத்தின் சுவையை விஞ்சும் வகையில் இன்று பேசி உள்ளார், முதலமைச்சர் ஸ்டாலின். இப்படியெல்லாம் பேசுவதை கேட்டு பூரிப்பதா? புளகாங்கிதமடைவதா? எனத் தெரியாமல் தவிக்கிறோம், மிஸ்டர். எம்.கே.எஸ்! நம் நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் ...

அதிமுக அரசு உள்ளாட்சி விவகாரங்களை அணுகியதைப் போலவே, திமுக அரசும் தற்போது அணுகுகிறது. கிராம சபை கூட்டங்கள் ரத்து, உள்ளாட்சி தேர்தலை ஆனவரை தள்ளிப் போடுவது, உள்ளாட்சி அதிகாரங்களை ஊனப்படுத்துவது…என்பது தொடர்கதையா..? முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளான சென்ற ஞாயிற்றுகிழமையில் வடபழனி உள்ளிட்ட தமிழகத்தின் பல கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றன. அதில் அமைச்சர்கள், விஐபிக்கள் பங்கேற்றனர். அதே போல முதல்வர் ஸ்டாலினே அறிவாலயத்தில் திமுக நிர்வாகி பூச்சி முருகன் திருமணத்தை திமுக உயர்மட்டத் தலைவர்கள் உடை சூழ நடத்தை வைத்தார். அப்படி இருக்க குடியரசு ...