பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் நல்ல மனிதர் தான்! ஆனால், நிதி அமைச்சராக அவர் படுதோல்வி அடைந்து கொண்டுள்ளார் என்பதற்கு இந்த பட்ஜெட்டே சாட்சியாகும்!  மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்த, திமுக ஆட்சியின் பட்ஜெட் இவ்வளவு ஆர்வம் காட்டுவதேன்? திமுக அரசு பதவி ஏற்ற பிறகு வெளியிடப்பட்டு இருக்கும் மூன்றாவது பட்ஜெட் இது! பி.டி.ஆர். சிறந்த பொருளாதார நிபுணர் தான்! ஆனால், அவரை சரியாக சுதந்திரமாக இயங்கவிடாதது ஒரு புறமும், தமிழக பொருளாதார கள நிலவரங்கள் அவருக்கு போதுமான அளவுக்கு தெரியாமல் ...

அறிவார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்க கல்விக்கும், நூலக வாசிப்புக்கும் அதிக நிதி ஒதுக்கீடு, சுற்றுச் சூழலில் கவனம், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கை என்பதோடு – கொள்கை சார்ந்த பார்வைகளை அச்சமின்றி வெளிப்படுத்தியதது சிறப்பு! அதே சமயம், வாங்கி குவிக்கும் கடன்கள் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும்! பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு ரூ.32,599 கோடியிலிருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சிறப்பான அம்சமாகும்! இது ஒரு வகையில் யானைப்பசிக்கு சோளப் பொறி போன்றதாகும். ஏனெனில், பள்ளிக் கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப இந்த தொகை ...