தீஸ்தா! அச்சமில்லாதவர்! மோடியை அஞ்ச வைத்துக் கொண்டிருக்கும் மனித உரிமைப் போராளி! குஜராத் படுகொலையையும், அதில் மோடியின் தொடர்பையும் உலகறியச் செய்தவர். ஜெயமோகனின் அறம் மகத்தான மானுட நேயப் படைப்பு! இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு உண்மைக் கதையும் நம் உள்ளத்தை உலுக்குபவை. குஜராத் கலவர்ம் மற்றும் படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு இடையறாத சட்ட போராட்டதை நடத்திய தீஸ்தாவை தற்போது ஒன்றிய அரசு கைது செய்துள்ள நிலையில் இந்த நூல் முக்கியத்துவமாகிறது. பத்திரிகையாளரான தீஸ்தா செதல்வாட் எழுதிய ‘ தீஸ்தா செதல்வாட் நினைவோடை – அரசமைப்புச் ...
குற்றவாளிகள் அதிகாரம் மிக்கவர்களாக ஆகிவிடுகிறார்கள்! நிரபராதிகளும், நியாயத்தை கேட்பவர்களும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்! குஜராத் கலவரத்தில் கொல்லப் பட்டவர்களுக்காக இடையறாது துணிச்சலாக குரல் கொடுத்த தீஸ்தா செதல்வாத் கைது செய்துவிட்டால் உண்மைகள் ஊமையாகுமா? உலகையே உலுக்கிய குஜராத் மதவெறிப் படுகொலைகள் தொடர்பான பல வழக்குகளில் குல்பர்க்கா சொசைட்டி என்ற இடத்தில் 68 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் முக்கியமானது! இந்தப் பகுதியில் வசித்த காங்கிரஸ் எம்.பியான ஜாப்ரி அவர்கள் கலவரக்காரர்கள் தங்களை சூழ்ந்துள்ளது குறித்து அந்த இக்கட்டான நேரத்தில் அன்றைய முதல்வர் மோடி மற்றும் உயர் ...