கருக் கலைப்பை மறுப்பதாலும், சிக்கலுக்கு உள்ளாக்குவதாலும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் மரணிக்கிறார்கள்! அமெரிக்காவில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதற்கு அங்கு பெண்கள் பொங்கி எழுந்துள்ளனர்! கருக்கலைப்பு என்பதை ஏன் பெண்ணின் உரிமையாக கருத வேண்டும்? அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. கருக்கலைப்பு செய்வது தொடர்பான சட்டத்தை,  அந்தந்த மாநிலங்கள் இயற்றிக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு அங்குள்ள பெண்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், நம் நாட்டில் கருக்கலைப்பு வசதிகள் ...