13 பேர் கொல்லப்பட்ட தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறல் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கை மே 18 ந்தேதி முதல்வரிடம் தரப்பட்டது. இந்த மூன்று மாதங்களாக அதை வெளியிடாமல் தாமதப்படுத்தியது ஏன்? இந்த அத்துமீறலுக்கு காரணமானவர்களை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்? ”இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம்” என்று மூச்சுக்கு முன்னூறு தரம் சொன்னார் ஸ்டாலின். ஆனால், தற்போது மூன்று மாதங்களாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றி மூச்சு கூட விடாமல் மறைத்து உள்ளார் என்பது ...