தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகளின் சொல்லப்படாத வாழ்வியலை கருப் பொருளாக்கி, அ.சி. விஜிதரன் எழுதியுள்ள நாவல் ‘ஏதிலி’. ஒரு திறந்த வெளிச் சிறைச் சாலையில் இருக்கும் குடும்பங்கள் சந்திக்கும் துயரங்கள், வலிகள் ஆகியவை இலக்கிய வடிவம் கண்டுள்ளன! தமிழகம் எங்கும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் கிட்டத்தட்ட ஒன்னரை இலட்சம் அகதிகள் உள்ளனர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் ! அவர்கள் வாழ்வு எத்தகையது ? எதிர் கொள்ளும் இன்னல்கள் யாவை? என்பதை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் சித்தரிக்கும் நாவல்தான் ...