‘ஏழரைப் பங்காளி வகையறா’  மதுரை இஸ்மாயில்புரத்தை மையமாகக் கொண்டு, இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை நேர்கோட்டில் சொல்லும் யதார்த்தமான நாவல் இது. எஸ். அர்ஷியா எழுதிய இந்த நாவல் எளிய மனிதர்களின் உண்மைக் கதையாகும் .வாழத் தெரியாதவன் குடும்பம் படும் பாட்டை பேசுகிறது! ‘ஒரு சமூகத்தின் வாழ்வியலை, மூன்று தலைமுறை ஊடாக,  பேசுகிறது. இது வளமான இலக்கிய நாவல்’ என்று கூறுகிறார் பேரா.எஸ்.தோதாத்ரி். தன் முன்னோர்களின் வாழ்வியலை இழையாகக் கொண்டு ஏழரைப் பங்காளி என்ற வம்சத்தின் பெயரையே நாவலாக்கி உள்ளார், அர்ஷியா. 15 ஆம் நூற்றாண்டில் இஸ்மாயில் ...

தமிழ்நாட்டின்  அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகளின் சொல்லப்படாத வாழ்வியலை கருப் பொருளாக்கி, அ.சி. விஜிதரன் எழுதியுள்ள நாவல் ‘ஏதிலி’. ஒரு திறந்த வெளிச் சிறைச் சாலையில் இருக்கும் குடும்பங்கள் சந்திக்கும் துயரங்கள், வலிகள் ஆகியவை இலக்கிய வடிவம் கண்டுள்ளன! தமிழகம் எங்கும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் கிட்டத்தட்ட ஒன்னரை இலட்சம் அகதிகள் உள்ளனர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் ! அவர்கள் வாழ்வு எத்தகையது ?  எதிர் கொள்ளும் இன்னல்கள் யாவை? என்பதை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் சித்தரிக்கும் நாவல்தான் ...

முதல் உலகப் போரில் போரிட்ட இந்திய வீரர்களின் வலி மிகுந்த அனுபவங்களின் ஊடாக, போலி தேசபக்தியும், போர்வெறியும் விளைவிக்கும் பேரழிவுகளை துல்லியமாக காட்சிப்படுத்துகிறது     ச. பாலமுருகன் எழுதிய இந்த நாவல்! டைகரிஸ் நதிக்கரையில் போரிட்டு, அந்த நதி வெள்ளத்தில் தங்கள் ரத்தத்தை ஈந்து உயிரிழந்த இந்திய வீரர்களின் சொல்லப்படாத கதை! மனித உரிமை செயற்பாட்டாளரான ச.பாலமுருகன்  எழுதியுள்ள  நாவல் ‘டைகரிஸ்’. முதலாம் உலகப் போரில் இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான வீரர்கள், அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த வெள்ளையர்களுக்கு ஆதரவாக போரில் கலந்து கொண்டனர். துருக்கி ...