காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத ஒரு இக்கட்டில் இருக்கிறது என்பது உண்மைதான்! அந்த இக்கட்டில் இருந்து மீண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்..? குலாம் நபி ஆசாத்தும் கபிள்சிபலும் யாருக்காக பேசுகிறார்கள்..? அவர்களின் நோக்கம் என்ன..? பஞ்சாபில் நடக்கும் சம்பவங்கள் காங்கிரஸ்காரர்களையும்,காங்கிரஸ் ஆதரவாளர்களையும் உலுக்கி வருகின்றன. காங்கிரஸ் பலமாக இருக்கும் ஒரு சில மாநிலங்களில் பஞ்சாப் குறிப்பிடதக்கது! அங்கு காங்கிரஸ் பலவீனப்படுவதும், அப்படி பலவீனமடைய காங்கிரஸின் தேசிய தலைமையே காரணமாகிவிட்டதோ என்ற உணர்வும் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது! அமரீந்தர் சிங் போன்ற ...