பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கியே தீருவது என்பதில் படிப்படியாக முன்னேறி வருகிறது பாஜக அரசு. அரசுத்துறை வங்கிகளை அணுவணுவாக பலவீனப்படுத்தி, தனியார் வங்கிகளை மட்டுமே தழைத்தோங்கச் செய்வதே அரசின் திட்டமாக அரங்கேறி வருகிறது! சமீபத்தில் கூட ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்ற நிலையில், அவ்வங்கி தனியார் மயமாக்கப்பட்டது. தற்போது நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கை குறைப்பதற்கான சட்டதிட்டங்களை அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. இதை எதிர்த்து தான் இந்தியா முழுமையும் வங்கி ஊழியர்கள் ...