பத்திரிகை பணியை மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டமாக வைத்துக் கொள்பவர்கள் மிகச் சிலரே! அவர்களில் முக்கியமானவர் பி.சாய்நாத்! எளிய மனிதர்களின் பாடுகளை சொல்வதற்கும், கிராமப்புற ஏழை எளிய விவசாயிகள் வாழ்க்கையை பதிவு செய்யவும், மூலை முடுக்கெல்லாம் பயணித்து எழுதியுள்ளார்! பரபரப்பு, மலினமான ரசனைகள்,அரசியல் சார்பு நிலை,லாப நோக்கம் ஆகிய அம்சங்களாக பத்திரிகைதுறை வீழ்ந்துபட்டுள்ள நிலையில் சாய்நாத் போன்ற முன்னோடிகளே இன்று நமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர். தற்போது ஜப்பான் நாட்டின் சர்வதேச விருதான ஃபுகுவோகா கிராண்ட் விருதுக்கு தேர்வாகி உள்ளார் பி.சாய்நாத்! தற்போது 64 ...