முதுகெலும்புள்ள – சுய அறிவுள்ள – ஒரு நிதி அமைச்சர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார் என நினைத்து சந்தோஷப்பட்டேன். பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் இந்த சுயமரியாதையையும், சுய அடையாளத்தையும் மீட்டெடுக்கும் நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முதல் நன்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தி விடுகிறேன். ஏனென்றால் ஒரு பொலிடிகல் வில் பவர் இல்லாமல் இந்த நிதி நிலை அறிக்கைக்கு முதல்வர் ஒத்துழைப்பும், உறு துணையும் தந்திருக்க முடியாது! நிதிநிலை அறிக்கை குறித்து விரிவாக வியாக்கியானம் செய்ய விரும்பவில்லை! முக்கிய அம்சங்களை மட்டும் கவனப்படுத்துகிறேன். ஒரு மாநில அரசு சிறபாக செயல்படுவதற்கு ...