ஒரே இந்துத்துவ கொள்கையால் மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சிவசேனா உறவு பூண்டு, கூட்டணி கண்டது. ஆனால், 25 ஆண்டு கால நட்பில் தான் இளைத்தும், பாஜக பெருத்தும் வருவதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டது! அதனால், பாதை மாறி, பயணத்தை தொடர்ந்தது! காத்திருந்த பாஜக, இன்று கருவறுப்பு செய்கிறது! 2019 ம் ஆண்டு நவம்பர் 23 அன்று மராட்டிய கவர்னர் பகத்சிங் கொஷியாரி அதிரடியாக அதிகாலை மூன்று மணிக்கு பாஜகவின் தேவேந்திர பட்நாவிசை முதல்வராகவும் தேசிய காங்கிரசை சேர்ந்த அஜீத் பவாரை துணை முதல்வராகவும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  ...