விவேகானந்தர் வீர மதத்துறவி  என்கிற சிமிழுக்குள் அடங்குபவரல்ல! அவரின் சமூக அரசியல் சிந்தனைகள் பார்வை தீர்க்கம் நிறைந்தவை. சமூக வளர்ச்சி, அரசின் தோற்றம், இந்திய சமூகத்தில் கொள்ளவேண்டியவை- தள்ள வேண்டியவை குறித்து அவர் எழுதியவை நமக்கு பிரமிப்பு ஊட்டக்கூடியன. அவரின் மேதாவிலாசத்தை பறை சாற்றுவன. உண்மையான ஆன்மீகம் என்ன என்ற புரிதலையும், இந்தியாவில் சாதிகள், அவற்றின் குணாம்சங்கள், சமூக பங்களிப்புகள் ஆகியவை குறித்த துல்லியமான மதிப்பீடுகளையும் விவேகானந்தர் கொண்டிருந்தார்! ஆன்மீக வழியை அனைவருக்கும் திறக்க கிருஷ்ணன், சமூக சமத்துவத்திற்காக  புத்தம்- வைஷ்ணவம் என போராட்டங்கள் ...