தமிழைப் போன்ற தலைசிறந்த மொழியும் இல்லை தமிழைப் போல அரசியல்படுத்தி, அலட்சியப்படுத்தப்பட்ட மொழியும் உலகில் வேறில்லை! உலகின் ஆறு செம்மொழிகளில் ஒன்றான தமிழை செம்மொழியாக அறிவிக்கவைக்க ஒரு அரசியல் அழுத்தம் தேவைப்பட்டது! அந்த அரசியல் அழுத்தமே இன்றைய அதன் அலட்சியத்திற்கும் காரணமாயிற்று! தமிழை செம்மொழியாக்கியது அதன் தகுதியால் மட்டுமல்ல, அரசியல் அழுத்ததால் தான் அது சாத்தியமாயிற்று என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது! ஆகவே, அது போன்ற அழுத்ததை தெலுங்கு,கன்னட,மலியாளம்,ஒடியா மொழி அரசியல்வாதிகளும் செய்து செம்மொழி அந்தஸ்து பெற்ற அவலம் நடந்தேறியது! செம்மொழிக்கான ஆராய்ச்சி, அதன் சிறப்புகளை ...