நெருப்பை எடுத்து பஞ்சு குடோனில் வைப்பது போல, வெறுப்பை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரத் தடையில்லை என்கிறது பாஜக அரசு! இது நாள் வரை ஆர்.எஸ்.எஸ் ஏன் தனிமைபடுத்தப்பட்டது? அரசு நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ் மயமானால் ஏற்படும் விளைவுகள் என்ன..?  ஜூலை திங்கள் 9 அன்று ஒரு சுற்றறிக்கையை சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளது மோடி – அமித்ஷா கும்பல். இதில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக  அமலில் உள்ள ஆணைகளை மாற்றி புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. “எந்த அரசு அலுவலரும் தமது பணிக்காலத்தில் எந்த ...

திராவிட மாடலைப் புரிந்துகொள்வோம் – 4 சாதாரண மக்களை முன்னிறுத்தி சிந்தித்து செயல்பட்ட கேரளா மாடல்!கார்ப்பரேட்டுகளை வாழ வைக்க, சராசரி மக்களை சக்கையாக பிழிந்த குஜராத் மாடல்! கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை அனைவருக்குமாக்கிய கியூபா மாடல்..போன்றவற்றை பார்க்கையில் திராவிட மாடல் எந்த ரகம் எனப் பார்ப்போமா..? ‘மாடல்’ என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் ஆடம்பரப் பொருட்களை விற்பதற்கென முன்னிறுத்தப்படும் அழகுப் பதுமைகளை, கட்டுமஸ்தான இளைஞர்களை மாடல் என்றழைக்கிறோம். ஓர் ஓவியருக்கு அல்லது புகைப்பட நிபுணருக்கு மாதிரியாக இயங்குபவரும் ...

பட்ஜெட்டாம் பட்ஜெட்! இது  சீனிப் பட்டாசு தான்! ஏழைகளை மரித்துவிடாமல் வைத்துக் கொள்ள அவ்வப்போது சற்று கஞ்சியை ஊத்தி காப்பாற்றவும், பணக்காரன் இலையில் கணக்கு வழக்கின்றி நெய் மணக்கும் பால் பாயாசத்தை அள்ளி ஊற்றவும் தெரிந்த கலையைத் தான் கச்சிதமாகச் செய்கிறார்கள்; மத்திய பட்ஜெட் ஒரு அலசல்; தனி நபர் சம்பாத்திய வரிவிதிப்பை பொறுத்த வரை அடிப்படை வருமானம் ரூ.3 லட்சம் வரை வரி இல்லை என்பதில் எந்த மாற்றமும் செய்யாதது கீழ் அடுக்கில் உள்ள நடுத்தர வர்க்கத்திற்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. # ...

தலித்துகளின் பாதுகாப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி தற்போது தலித்துகளை தாக்குவோருக்கான பாதுகாப்பு இயக்கமா..? தலித்துகள் பாதிக்கப்பட்ட இத்தனை சம்பவங்களில் எத்தனைக்கு வாய் திறந்தீர்கள்? எத்தனைக்கு போராடினீர்கள்..? இதோ இந்தப் பட்டியலுக்கு பதில் சொல்வீர்களா திருமா? பார்ப்போமா..? தலித்துகளுக்கு எதிராக திமுக அரசில் எத்தனையெத்தனை வன்முறைகள் அரங்கேறினாலும் பெரும்பாலானவற்றில் அமைதி காப்பது, ஒருசிலவற்றில் முணுமுணுப்பது, குறிப்பிட்டவற்றுக்கு மட்டும் அறிக்கை தருவது, வெகுசிலவற்றுக்கு மட்டும் பேருக்கு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு ‘’எஜமானே கோவிச்சுக்காதீங்க,, இது கூட உங்களுக்கு எதிராக இல்லை. என்னோடு இருக்கிறவங்க என்னை கைவிட்டு போய்விடக் ...

‘சுயராஜ் இந்தியா’வின் தலைவரான யோகேந்திர யாதவ் சென்னையின் முன்னணி சமூகச் செயற்பாட்டாளர்களோடு ஒரு உரையாடல் நிகழ்த்தினார். கூர்மையான அறிவாற்றல், பாரபட்சமற்ற பார்வை, எளிமை, நேர்மை ஆகியவற்றின் கலவையாக வெளிப்பட்ட யோகேந்திர யாதவ் பேச்சின் சாரம்சம்; அறப்போர் இயக்க அலுவலகத்தில் ஜுலை -19 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் சமூக இயக்கங்களின் ஆர்வலர்கள் பரவலாக கலந்து கொண்டனர். Making Sense of Indian Democracy: Theory in Practice என்பது போன்ற மக்களாட்சி குறித்த ...

தேவபூமி எனப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதர் நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி எனும் நான்கு கோவில்களின் உறைவிடமான  ஆன்மீக பூமியை வன்மமும், வெறுப்பும் மிகுந்த நரகமாக மாற்றி வருகின்றனர் பாஜகவினர் என்பதற்கு அதிர்ச்சி தரும் இந்த சம்பவமே சாட்சியாகும்; உத்தராகாண்ட் மாநில தலைநகரான, டேராடூனில் ஜுலை 14 அன்று கிறித்துவர்களின் வழி பாட்டுத்தலமான ஒரு சிறிய தேவாலய இல்லத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட இந்து மத தீவிரவாதிகள்  புகுந்து அங்கிருந்தோரை தாக்கி, காயப்படுத்தி அங்கிருந்த பொருட்களையும் உடைத்து நொறுக்கி நாசப்படுத்தியுள்ளனர். டேராடூனின் நேரு காலனியில் ...

திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் -3 ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை ஸ்டாலின் என்னென்ன பேசினார்..! அந்தப் பேச்சுக்களை தற்போது மீளவும் பார்க்கையில் உண்மையிலேயே சிலிர்க்கிறது..! ‘நம்மை ஆட்சி செய்வது ஒரு தேவ தூதனோ.! இவர் நம்மை பொற்காலத்திற்கு கொண்டு செல்ல உள்ளாரோ’ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது; சில உதாரணங்கள்; கடந்த 2021-ஆம் ஆண்டு யூலை 9 அன்று தமிழக பொருளாதார வளர்ச்சிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் நாட்டில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி ...