‘அடி, உதை, தாக்கு! அடிபட்டவன் மேலேயே காவல்துறையை ஏவி எப்.ஐ.ஆர் போடு..’- இது தான் இன்றைய திமுக ஆட்சியின் ஸ்டைலா..? எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காது! முதல்வர் ஊடகங்களை சந்திக்க மாட்டார்! ‘ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடுது..’ எனச் சொல்பவர்களை மட்டுமே பிடிக்கும் என்றால் எப்படி..? ‘பிரபல ஊடகங்களும், தற்போதைய திமுக அரசும் மிக இணக்கமாக இருக்கிறார்கள்’ என்பது உண்மையா..? என்றால், ‘இணக்கமாக இருக்கிறாங்க தான் ஆனால், இல்லை..’ என்ற ஒரு குழப்பமான பதிலே வரும்! உண்மை என்னவென்றால்.., திமுக ஆட்சியில் ஊடக முதலாளிகள் ...

வேலை இல்லா திண்டாட்டத்தையே கொண்டாட்டமாக்கி, வேலை தருவதாக ஆசைகாட்டி, பணம் பறித்து ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுகிறது சில கும்பல்கள்! இவர்கள் எப்படியெப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்? இளைஞர்கள் எப்படி தூண்டில் மீன் போல இவர்கள் வலையில் விழுந்து துடிக்கிறார்கள்..! தீர்வு என்ன? மக்களிடம் இருந்து பணம் திருடுவது பல வகையில் நடைபெறுகிறது. நேரடியாக பணத்தை திருடுவது, ஆசை வார்த்தைகள் சொல்லி பணத்தை திருடுவது, ”வங்கியில் இருந்து பேசுகிறோம்” என்று கூறி பணம் திருடுவது, ”வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறேன்” என்று பணம் திருடுவது, தொழில்நுட்ப உதவியுடன் ...

ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும்  சூழ்ச்சி போல,  ‘கர்ப்பபை புற்று நோய்’  என பயமுறுத்தி, 9 வயதிலிருந்து 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசித் திட்டமாம்! இந்த  HPV தடுப்பூசியால் உயிரிழப்புகள், பக்க விளைவுகள் உறுதிபட்ட பிறகும், வலிந்து  திணிக்கும் மர்மம் என்ன?  யார், யார் பலனடைய..? Human Papilloma என்ற Virus-ஆல் ஏற்படுவதே கர்ப்பப்பை வாய் புற்று நோய் எனப்படுகிறது. பொதுவாக பலருடன் பாலியல் உறவு கொள்வோருக்கு முன் எச்சரிக்கையாக இந்த தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.  கர்ப்பப்பை புற்று நோய் என்பது கருப்பை வாயை ...

நிலத்தடி நீர் பாசனமே அற்றுப் போகும்.. ஏரி, குளம், குட்டை, கிணறுகளுக்கு நீர் கிடைக்காது. பயிர்கள் அழியும், பறவைகள் மடியும்! குடி நீர் பஞ்சம் ஏற்படும் கொங்கு மண்டலமே பாலைவனமாகும் பல்லுயிர் பெருக்கமே சிதையும். சுற்றுச் சூழலே சூனியமாகும்..! இவையெல்லாம் கீழ்பவானி கால்வாயை பலப்படுத்த தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிகழும் அசம்பாவிதங்கள்! ஆகவே, நாங்கள் இதை செயல்படுத்த அனுமதிக்கமட்டோம்’ என கொங்கு மண்டலமே போர்க்கோளம் பூண்டது போல உண்ணாவிதங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டுக் கொண்டுள்ளன! இவ்வளவு பயத்தை ஏற்படுத்தி இருக்கும் ...

ஆறுகளைத் தேடி – 6 பச்சை நிற மலைகளுக்கும், நீல நிறக் கடலுக்கும் இடையில் ரத்த நாளங்களை போல வெள்ளி நிற நீரோடைகள் பாய்ந்தோடும் ஒரு அழகிய நிலப்பரப்பு குமரி மாவட்டம்! மலைகள், அருவிகள், ஓடைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், வயல் வெளிகள், பாக்கு, தென்னந் தோப்புகள், நீரோடும் வாய்க்கால்கள், கடற்கரையோர பொழிமுக பகுதிகள், அலையாத்திக் காடுகள் என ஒட்டு மொத்தமாக இயற்கையின் அழகை ஒரே இடத்தில் காண முடியும். என்றும் இளமையாக இருக்கும் ஓர் நிலப் பரப்புக்கு குமரி என்று பெயர் வைத்தவர்கள், ...

வெளித் தோற்றத்திற்கு நாத்திகவாதி! ஆனால், உள்ளத்தில் உறைவதோ வைஷ்ணவ பார்ப்பனீயம்!அவர் சொந்தமாக எடுத்த படங்களில் எப்படியெப்படி எல்லாம் இஸ்லாமிய வெறுப்பையும், இந்து வைஷ்ணவப் பற்றையும் வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பதையும், அமரன் படத்திற்கான எதிர்ப்பையும் அலசுகிறது இந்தக் கட்டுரை; திருட்டு கேசட் விற்பனை பிரச்சினை பெரிதாக வெடித்த அந்த காலகட்டத்தில் திருட்டு வீடியோ கேசட்டுகள் விவகாரத்தில் அரசுக்கு என்னவிதமான கோரிக்கை வைப்பது என்பது குறித்து தென் இந்திய பிலிம் சேம்பரில் தயாரிப்பாளர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது.  தயாரிப்பாளர் என்ற வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் இடம் ...

சீக்கிய சமூகத்தின் வழிகாட்டியான குரு நானக் அவர்களின் பெயரால் சென்னை வேளச்சேரியில் நடத்தப்படும் குருநானக் கல்லூரி நிர்வாகி மஞ்சித் சிங் நையரும், உயர்கல்வித் துறை அதிகாரி ராவணனும் கூட்டு சேர்ந்து பேராசியர்களிடமும், ஏழை மாணவர்களிடமும் நடத்தும் வசூல் வேட்டைக்கு ஒரு அளவில்லையா…? ஏழை, எளிய குடும்பத்தின் பிள்ளைகள் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்வதற்காக சீக்கிய மதத்தினரால் சென்னையில் குரு நானக் கல்லூரி உருவாக்கப்பட்டது.  குருநானக் அவர்களின் உயர்ந்த லட்சியங்களை பின்பற்றி, சீக்கிய பெரியோர்களால் உருவாக்கப்பட்ட குருநானக் கல்லூரி தற்பொழுது எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த ...

மம்மூட்டியின் அபார நடிப்பில் வந்துள்ளது ‘பிரமயுகம்’.  17-ஆம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்கு முறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவின் தொன்மங்களையும், மாந்திரீகங்களையும், ஒடுக்குமுறை அரசியலையும்  நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்; கேரளாவின் எல்லா திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், விமர்சகர்களின் கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் கிளாசிக் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பை பிரமயுகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 17- ஆம் நூற்றாண்டில் தெற்கு மலபாரில் நடக்கும் கதை. பாணன் ஒருவர் ...

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக கட்சியினர் ஆறாண்டுகள் அடைந்த ஆதாயங்கள் கொஞ்சமா? நஞ்சமா? வருமான வரித்துறையை கட்டப் பஞ்சாயத்தாக மாற்றி, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு! இது போல EVM தில்லு முல்லுகளை முன் கூட்டியே தடுக்குமா உச்ச நீதிமன்றம்..? உச்சநீதி மன்றம் மோடி அரசின் தேர்தல் பத்திர சட்டங்கள், ”அரசியல் சாசன விதிகளுக்கு முரணானது, உள் நோக்கம் கொண்டது, வெளிப்படைத்தன்மை இல்லாத சட்டம். எனவே, இது செல்லாது” எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பாரதீய ஜனதா அரசின் ஏவல் பூதமாக ...