சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பிளாக்மெயில் அரசியலுக்கே பாஜக அரசு பயன்படுத்தியது! ஆட்சித் தலைமையின் கட்டளைகளுக்காக தவறு செய்த அதிகாரிகள் சும்மா இருப்பார்களா..? அதிகாரிகளின் தவறுகளுக்கு ஆட்சியாளர்களின் தவறுகள் எப்படி பாதை போட்டன… என ஒரு அலசல்; மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதன் துணை மண்டல அதிகாரி அம்ரித் திவாரி அறையில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான அதிகாரிகள்  13 மணி நேரம் சோதனை நடத்தி முடிவடைந்த நிலையில் பல்வேறு முக்கிய ஆவணங்களையும், வருகை பதிவேடுகளையும் கைப்பற்றி ...

மோடி – அமித்ஷா கூட்டணியின் மூர்க்கமான நகர்வுகளாக அவசர, அவசரமாக இரு சட்டங்கள்! எதற்கு? சி.பி.ஐ அமைப்பை சிதைக்கவும், அமலாக்கத் துறையை அடிமைத் துறையாக்கவும்! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க சற்று முன்னதாக அவசர அவசரமாக மோடி-ஷா கூட்டணி இரண்டு அவசர சட்டங்களை நவம்பர் 13ந்தேதி பிறப்பித்துள்ளது. அமலாக்கப் பிரிவு இயக்குனர், சி பி ஐ  இயக்குனர் ஆகியோரின் பதவிக்காலம்  தற்போது இரண்டு ஆண்டுகள் என்று இருப்பதை ஒவ்வொரு வருடமாக நீட்டித்து பதவி தொடரச் செய்யவும்,  அப்படி ஐந்தாண்டுகள் வரை இத்தகைய பணி நீட்டிப்பு வழங்கவுமான ...