சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பிளாக்மெயில் அரசியலுக்கே பாஜக அரசு பயன்படுத்தியது! ஆட்சித் தலைமையின் கட்டளைகளுக்காக தவறு செய்த அதிகாரிகள் சும்மா இருப்பார்களா..? அதிகாரிகளின் தவறுகளுக்கு ஆட்சியாளர்களின் தவறுகள் எப்படி பாதை போட்டன… என ஒரு அலசல்; மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதன் துணை மண்டல அதிகாரி அம்ரித் திவாரி அறையில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான அதிகாரிகள் 13 மணி நேரம் சோதனை நடத்தி முடிவடைந்த நிலையில் பல்வேறு முக்கிய ஆவணங்களையும், வருகை பதிவேடுகளையும் கைப்பற்றி ...
”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினரின் ஊழல்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்போம்” என மேடைக்கு மேடை ஸ்டாலின் பேசினார்! உச்சபட்ச ஊழல்களில் திளைத்த அதிமுக ஆட்சி மீது விரக்தியில் இருந்த தமிழக மக்கள் ‘கண்டிப்பாக இந்த ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்’ என திமுக கூட்டணிக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெற வைத்தனர்! ஸ்டாலின் கூறிய வாக்குறுதிகளை நம்பி சமூக ஆர்வலர்களும், அந்தந்தத்துறை சம்பந்தப்பட்ட நேர்மையாளர்களும், அந்தந்த ஏரியாவில் வாழும் மக்கள் சிலரும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகுந்த ஆதாரங்களைத் திரட்டி புகார்கள் தந்தனர்! ...