1908 ல் அகில இந்தியாவையும் அதிர வைத்தது திருநெல்வேலி எழுச்சி! அப்போது ரஷ்யாவில் புரட்சி நடக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி தோன்றவில்லை. ஆனால், தூத்துக்குடியில் மக்களைத் திரட்டித் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். திருநெல்வேலியும், தூத்துக்குடியும் தீக் கொழுந்துவிட்டு எரிந்தன! இதன் பின்புலத்தில் இருந்த தலைவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம், மக்களின் ஆவேசத்தை நினைவு கூர்வோம்; இன்று திருநெல்வேலி எழுச்சி தினமாகப் பெருமிதத்துடன் நினைவுகூரப்படும் நாள். 116 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டவுடன் திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் ...

குடியரசுதின சிறப்புக் கட்டுரை சங்க காலத்திலேயே வெளி நாட்டில் வணிகம் செய்ய பாய்மரக் கப்பலில் பயணித்த பாரம்பரியம் தமிழர்களுக்குண்டு. சோழர் காலத்திலேயே பிரம்மாண்ட கப்பற்படைகள் இருந்தன. இடைகாலத்தில் நாம் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க வ.உ.சி கொண்ட பெரு முயற்சிகளும், பெருந்துயரங்களும் காவியத் தன்மை கொண்டவை! ஆங்கிலேயருக்கு எதிராக, அழிந்து கொண்டிருந்த இந்திய கடல் போக்குவரத்து தொழிலுக்கு  புத்துயிர் அளித்தவர். இந்திய கடல்சார் வர்த்தகம் இழந்த புகழினை மீட்டெடுக்க,  வ.உ.சி. ஆற்றிய சேவை அவரது சம காலத்திலும், முன்னெப்போதும் நிகழாத மாபெரும் முன்னெடுப்பு! பிரிட்டீஷ் இந்திய ...