வீரப்பனை பற்றி தெரிந்த நமக்கு வீரப்பன் குழுவில் உள்ள சாகசமான நபர்களையும்,அவர்களின் குணாதிசியங்களையும் பற்றி தெரியாது. வீரப்பனை, அவர் குழுவின் பல்வேறு அங்கத்தினர்களை, இவர்களுடன் தொடர்பிலிருந்த மக்களை, போலீசின் தேடுதல் வேட்டைகளை பற்றியெல்லாம், மிகவும் விலாவாரியாக, துல்லியமாக எழுதப்பட்ட நூல்களே இவை! ஒரு மனிதனைப் பற்றி 2000 பக்கங்களுக்கு சலிப்பேயின்றி, விறுவிறுப்பாக எழுத முடியுமா? ஆம் முடியும் என்பதை நிருபிக்கிறது பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம் எழுதி வெளிவந்து உள்ள புத்தகங்கள்! அவரது “வீரப்பன் வாழ்ந்ததும்-விழுந்ததும்”  மொத்தம் 4 பாகங்களாக  வெளிவந்துள்ளன! தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார் ...

தமிழகத்தில் ஒரு காலத்தில் அறிவு கோயிலாகத் திகழ்ந்த நூலகத்துறை தற்போது சீரழிந்து கொண்டிருக்கின்றது. மக்களுக்கும்,மாணவர்களுக்கும் அறிவு ஊற்றுக்கண்ணாக இருந்த நூலகத்துறை ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறியுள்ளது. மக்களுக்கு வாசிக்கும் பழக்கமும்,அறிவுத் தேடலும் அதிகமாக உள்ள தற்போதைய காலகட்டத்தில் நூலகத்துறையோ முடக்கத்திலும், முறைகேட்டிலும் மூச்சுத் திணறி தவிக்கிறது. தமிழகத்தில் புத்தக பதிப்பகங்கள்,வெளியீட்டு நிறுவனங்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே நூலகத் துறையின் ஆர்டர்கள் குறைந்தன. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நூலகத்துறை கண்டு கொள்ளப்படாமல் போனது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பதிப்பகத்தார். விற்பனையாளர்களிடமிருந்து ...