வீரப்பனை பற்றி தெரிந்த நமக்கு வீரப்பன் குழுவில் உள்ள சாகசமான நபர்களையும்,அவர்களின் குணாதிசியங்களையும் பற்றி தெரியாது. வீரப்பனை, அவர் குழுவின் பல்வேறு அங்கத்தினர்களை, இவர்களுடன் தொடர்பிலிருந்த மக்களை, போலீசின் தேடுதல் வேட்டைகளை பற்றியெல்லாம், மிகவும் விலாவாரியாக, துல்லியமாக எழுதப்பட்ட நூல்களே இவை! ஒரு மனிதனைப் பற்றி 2000 பக்கங்களுக்கு சலிப்பேயின்றி, விறுவிறுப்பாக எழுத முடியுமா? ஆம் முடியும் என்பதை நிருபிக்கிறது பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம் எழுதி வெளிவந்து உள்ள புத்தகங்கள்! அவரது “வீரப்பன் வாழ்ந்ததும்-விழுந்ததும்”  மொத்தம் 4 பாகங்களாக  வெளிவந்துள்ளன! தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார் ...

சட்டம் நீதி என்பவையெல்லாம் செல்வாக்கானவர்களுக்கு ஒன்றாகவும், செல்லாக் காசாக புறந்தள்ளப்பட்ட எளிய மக்களுக்கு ஒருவிதமாகவும் தான் இருக்கிறது என்பதற்கு 75 வயதை கடந்து 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், ஆண்டியப்பன்,பெருமாள், ஞானப்பிரகாசம், மீசைக்கார மாதையன் ஆகிய ஐவரே உதாரணமாகும்! ராஜிவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எழுவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து கவனப்படுத்தவாவது தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் லாபி இருக்கிறது. இவர்களுக்கோ அதுவும் இல்லை…! தவறு செய்தவர்கள் யாரும் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால், தண்டணையானது கால ...

வீரப்பனை பற்றி அக்குவேறு ஆணிவேராக தெரிந்து வைத்துள்ள பத்திரிகையாளர்களில் சிவசுப்பிரமணியன் முதலாமவர். வீரப்பன் என்பவனை தனி மனிதனாக பார்த்து எழுதிவிட முடியாது! காடு அதில் வாழும் உயிரினங்கள்,அங்குள்ள மரங்கள் மற்றும் இயற்கைச் சூழல்,பழங்குடிகள், காவல்துறை, இரு மாநில அரசுகள், வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள்..என அனைத்தையும் சரியாக உள்ளது உள்ளபடி உள்வாங்கி எழுத வேண்டும். இது போன்ற நூல்களை  கதை புத்தகம் போல்  எழுதிவிட முடியாது. நாட்டிற்கே தெரிந்த ஒரு நபரை பற்றி எழுதும்பொழுது இன்னும் கவனமாக இருக்க வேண்டும். மற்றும் பல எதிர்ப்புகளை சந்திக்க ...

 (பகுதி-4)  வீரப்பனுக்கே தெரியாத நல்ல விஷயங்கள் வீரப்பன் நடமாட்டத்தால் காட்டில் நடந்தன. காட்டில் நிறையக் கல்குவாரிகள் உண்டு. வெடிவைத்து பாறைகளைப் பிளக்கும்பொழுது ஏற்படும் சத்தம் 15 கிலோமீட்டர் தூரம் கேட்கும். பொதுவாக விலங்குகள், பறவைகள், சிறு உயிரிகள் சிறு சத்தத்தைக் கேட்டாலும் ஓடி  ஒளிந்து கொள்ளும். காடு நூலகம் போல் மிக அமைதியான இடம். அங்கு வெடிச் சத்தம் கேட்டால் அங்கு வாழும் காட்டுயிர்களின் நிலைமை என்னாகும் மற்றும் வெடி வெடிக்கும் பாறைகளுக்கு அருகில் இருக்கும் உயிரினங்கள் நிறைய இறந்துவிடும். இது மட்டுமில்லாமல் இயற்கை ...