தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே செல்கிறது! மின்வாரியத்திற்கு நாளுக்கு நாள் கடன் அதிகரித்த வண்ணம் உள்ளது. மின் உற்பத்தி மின் விநியோகம் மேன்மேலும் தனியார்மயமாகிறது. இவை குறித்து தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தியிடம் ஒரு நேர்காணல்; சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தியது பல விவாதங்களை உருவாக்கியுள்ளது அது மட்டும் இல்லாமல் பலருக்கு வைப்புத் தொகை கட்டணமும் வசூலித்து உள்ளனர். உண்மையில் என்ன நடக்கிறது மின்சார துறையில் ? இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைப்பு கட்டணம் வசூலிக்கப்படும். இதில் ...
ஊழல், ஊதாரித்தனம், கமிஷன், கையூட்டு ஆகியவற்றின் மூலம் தமிழக மின்வாரியத்தை மீள முடியாத ஒன்றரை லட்சம் கோடி கடனில் தள்ளியுள்ளது அதிமுக அரசு! தற்போது இதை மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையை ஆதாரமாக காட்டி, தமிழக மின் துறை முறைகேடுகளை அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியுள்ளது! அறப்போர் இயக்கம் அதிமுக அரசின் பல்வேறு ஊழல்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கொடுத்துப் பார்த்தது. அவர்களிடமிருந்து வந்த ஒரே பதில் “விசாரிக்கிறோம்” “விசாரிக்கிறோம்” அதை தவிர எந்த நடவடிக்கையும் இல்லை. சிபிஐயிடம் சென்று முறையிட்டால் ...