ஒரு பக்கம் மதுவாலும், மற்றொரு பக்கம் மின் துறையில் 1,73,000 கோடி நஷ்டத்தாலும் தமிழகமே தள்ளாட காரணமானவர் அமைச்சர் தங்கமணியே! இந்த வகையில் தங்கத் தமிழகத்தை தகரத் தமிழகமாக மாற்றியதில் தன்னகரில்லா சிறப்பிடம் தங்கமணிக்கு உண்டு! சாதாரண அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த தங்கமணி இன்று ஒட்டு மொத்த நாமக்கல் மாவட்டத்தையும் விலைபேசி வாங்கும் அளவுக்கு செல்வச் செழிப்பில் மலைபோல விஸ்வரூபமெடுத்து கரன்சிகளைக் கொண்டு வெற்றியை கைப்பற்ற துடிக்கிறார்…! குமாரபாளையம் தொகுதி ஏழை,எளிய உழைப்பாளி மக்கள் நிறைந்த தொகுதி! ஒரிரு கைத்தறிகளையோ, விசைத்தறிகளையோ வைத்துக் ...
ஊழல், ஊதாரித்தனம், கமிஷன், கையூட்டு ஆகியவற்றின் மூலம் தமிழக மின்வாரியத்தை மீள முடியாத ஒன்றரை லட்சம் கோடி கடனில் தள்ளியுள்ளது அதிமுக அரசு! தற்போது இதை மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையை ஆதாரமாக காட்டி, தமிழக மின் துறை முறைகேடுகளை அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியுள்ளது! அறப்போர் இயக்கம் அதிமுக அரசின் பல்வேறு ஊழல்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கொடுத்துப் பார்த்தது. அவர்களிடமிருந்து வந்த ஒரே பதில் “விசாரிக்கிறோம்” “விசாரிக்கிறோம்” அதை தவிர எந்த நடவடிக்கையும் இல்லை. சிபிஐயிடம் சென்று முறையிட்டால் ...