மகாத்மா காந்தி கொலைக் குற்றவாளிகளை நமது அரசுகளும், நீதித் துறையும் அணுகிய விதத்திற்கும் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை அணுகிய விதத்திற்கும் தான் எவ்வளவு  வேறுபாடுகள்! 15 ந்தே ஆண்டுகளில் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையானதும், 31 ஆண்டுகள் இவர்களின் சிறைவாசம் தொடர்வதும் குறித்த ஒரு அலசல்! காந்தி கொலையில் மொத்தம் ஒன்பது பேர் தான் கைதானார்கள்! ஏராளமானவர்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டனர்! சமீபத்தில் கூட மகாத்மா காந்தியின் படுகொலை குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தி வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாண்டா ...

காந்தியின் ஆஸ்ரம வாழ்க்கையே அவர் வாழ்ந்த எளிமை, கைத்தறி உள்ளிட்ட கிராம கைத் தொழில்கள், கால்நடை வளர்ப்பு, லட்சிய வாழ்க்கைக்கான அடையாளம்! அதாவது காந்தி வாழ்ந்த இடமே அவரது லட்சியங்களை பறை சாற்றுவதாய் இருக்கும்! அது தான் பாஜக அரசின் பிரச்சினையாகிவிட்டது! அந்த மனுஷனை அழித்துவிட்டோம் என நிம்மதி பெருமூச்சுவிட முடியவில்லையே! அவர் வாழ்ந்த இடமே ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்ததாக உள்ளதே. லட்சக்கணக்கான மக்கள் விரும்பி வந்து தரிசித்து, அவரது உணர்வுகளை உள்வாங்கி, செய்திகளை எடுத்துச் செல்லும் திருத்தளமாக இருக்கிறதே! நம்ம ஆட்சியில் இதற்கொரு ...