உத்திரப் பிரதேசத் தேர்தல் உக்கிரமடைந்து கொண்டுள்ளது. மீண்டும் பாஜக ஆட்சி வருவதற்குத் தான் வாய்ப்பு உள்ளது என பல ஊடகங்களும் சொல்லி வந்தன. ஆனால், தற்போதோ, பாஜக கூடாரமே காலியாகி, பலத்த பின்னடைவை கண்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. உத்திரபிரதேச அரசியல்; சுதந்திரமடைந்து முதல் 40 ஆண்டுகள் காங்கிரசின் கோட்டையாகத்  திகழ்ந்தது உத்திரபிரதேசம். 1990 களுக்கு பிறகு உ.பி மாநிலக் கட்சிகளின் கோட்டையானது. சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகியவை மட்டுமே பலம் பொருந்திய கட்சிகளாக இருந்தன. ஆனால், 2014 முதல் பாஜக தலைதூக்க ஆரம்பித்தது. ...

அவன் நன்றாக படித்த இளைஞன், ஹிந்து மதத்தை சேர்ந்தவன், உ.பியின் கொராக்பூர் உனாவுலி கிரமத்தில் கிராம பஞ்சாயத்து செயலாளரும் கூட! பார்க்க அழகான தோற்றம் கொண்டவன்! பெயர் அனிஷ் கன்னோஜியா! முதலமைச்சர் ஆதித்திய நாத்தை நேரடியாக சந்தித்து பேசும் அளவுக்கு  ஆர்.எஸ்.எஸ்சின் தீவிர செயற்பாட்டாளர்! அவனை தீப்தி மிஸ்ரா என்ற பெண் காதலித்தாள்! அவனும் அவள் அழகால், பேச்சால் ஈர்க்கப்பட்டான்! எனினும், அந்தக் காதலை பெண் பிராமண குலம் என்பதால், அவன் முதலில் தவிர்த்துப் பார்த்தான். ஆனால், காலப் போக்கில் காதலில் வீழ்ந்தான். இருவரும் ...