கருப்பசாமி, அருப்புக் கோட்டை பாஜகவிடம் தாங்கள் வியக்கும் அம்சம் என்ன? இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அது மாறி இருப்பது! காங்கிரசை காலியாக்கிக் கொண்டிருப்பது! திராவிடக் கட்சிகளை அடிமைகளாக ஆட்டுவிப்பது! பாமக போன்ற ஏராளமான சாதிக் கட்சிகளை பொம்மலாட்டம் ஆட வைப்பது! கண்ணுக்கு தெரிந்த வரை – இன்றைய நிலையில் – மற்ற கட்சிகளின் தலை விதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ள பாஜகவை தீர்த்துக் கட்டும் அரசியல் சக்தி ஒன்றைக் கூட காண இயலவில்லையே! க.செபாஷ்டின், வேலூர் ‘அரசுப் ...
பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி பாதையில் பயணப்படுவதாக பாஜக அரசு பொய்யான புள்ளி விபரங்களைத் தந்து கொண்டுள்ளது! ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! உண்மையில், அதிகமாக கடன்பட்டு, இந்தியா வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருப்பதை இந்தக் கட்டுரை தோலுரிக்கிறது! இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 13, 2022 அன்று, ”அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதைத் தடுப்பது என்ன?” என்று தொழில்துறையினரை கேள்வி கேட்டார். இது, முதலீடுகளை கவர்வதில் இந்தியா தோல்வி அடைந்து விட்டது என்ற ஒப்புதல் வாக்குமூலமாகும்! முதலீட்டாளர்களுக்கு ...
மு.கருப்பசாமி, அருப்புக் கோட்டை, விருதுநகர் மாவட்டம் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? ஒரு ஆண் எத்தனை பெண்ணோடு தொடர்பு கொண்டவனாகத் தான் இருந்தாலும், தனக்கான மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பான்! அதே போல கருணாநிதி எப்படிப்பட்ட ஊழல் செய்யும் தலைவர் என்பதை அருகிருந்து அணுவணுவாக உணர்ந்த போதிலும் தன்னை பொருத்தவரை ஒரு நேர்மையாளராக நிலை நிறுத்திக் கொண்டவர் சண்முகநாதன்! கருணாநிதியின் சாதனைகள் பலவற்றுக்கு அவரது மனைவி, மக்கள், சகாக்களை விட அதிக உறுதுணையாக இருந்த ஒரே நபர் ...