மாணவி லாவண்யா விஷமருந்தி  உயிர் இழந்தது சம்மந்தமான குற்றப்புலனாய்வை தமிழக காவல்துறையிடமிருந்து , மத்திய  புலனாய்வுத்துறைக்கு (CBI) மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பை பற்றி ஆதியோடந்தமாக அலசி விமர்சிக்கிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்! மாணவி லாவண்யா, தஞ்சை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில். 8 -ஆம் வகுப்பிலிருந்து ஐந்து ஆண்டுகள் அப்பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்தார். ஜனவரி 9 அன்று மாலை அவர் விடுதியில் வாந்தி எடுத்ததற்கு ஆரம்ப சிக்கிச்சை தந்த விடுதி நிர்வாகத்தினர், மாணவியின் தந்தைக்கு தகவல் அளித்து மாணவியை அழைத்து ...

மாரிதாஸ் விவகாரத்தில் அவசரகதியில் எப்.ஐ.ஆரையே நீக்கி, வழக்கை ரத்து செய்து நீதிபதி நடந்து கொண்டது விசித்திரமானது. இந்த வழக்கில் அரசு மேல் முறையீடு செய்யலாம். அத்துடன் கொரானாவையும், இஸ்லாமியர்களையும் சம்பந்தப்படுத்திய வழக்கில் அவரை கடுமையாக தண்டிக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக குற்றவியல் வழக்குகள் உட்பட எந்த வழக்குகளும் இந்த மின்னல் வேகத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. புலன் விசாரணைக்கு தடை அளிக்கப்பட்டாலே, சிறையில் இருப்பவர் வெளியில் வந்துவிடுவார். காவல்துறை குற்றத்தை புலன் விசாரணை  செய்வதற்கான முதல்படியே முதல் தகவல் அறிக்கைதான்,. கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு ...