லட்சத்தீவில் நடப்பது நாளை இந்தியா முழுமைக்கும் பாஜக அரசு செயல்படுத்த உள்ள இந்து ராஷ்டிரா திட்டத்தின் முன்னோட்டமா..? என்ற சந்தேகம் மனசாட்சியுள்ள யாருக்கும் தோன்றக் கூடும்…! அதி மோசம், படு அநாகரீகம், கெடு நோக்கம் கொண்ட ஒரு இந்துத்துவ நிர்வாகத்திற்கான மாடலை அங்கு நிறுவிக் கொண்டுள்ளது பாஜக அரசு! இதனால், இந்திய அரசின் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ், ஐஎப்.எஸ் அதிகாரிகள் 93 பேர் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த வருத்ததுடன் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்வழி நடக்க வலியுறுத்தும் குழு ...
அமைதி தவழ்ந்த லட்சத் தீவின் மக்களை தற்போது நிம்மதி இழந்து, கொந்தளிக்க வைத்துள்ளது பாஜக! இஸ்லாமியர்களை பெருமளவு கொண்ட இந்த தீவில் அவர்களை இல்லாதொழிக்கவே இப்படி ஒரு சதிதிட்டத்தில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளதாக தெரிய வருகிறது..!இதன் மூலம் பூர்வகுடிகளை பூண்டோடு அழிக்கத் துடிக்கிறது பாஜக! இந்திய யூனியன் பிரதேசங்களின் ஒன்றான இலட்சத்தீவுகள் அரபிக்கடல் கேரள கரைக்கு அப்பால் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது வரை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்ட இந்த தீவு, பா.ஜ. கவின் முக்கியஸ்தரான குஜராத்தின் அடாவடி அரசியல்வாதியுமான பிரபுல் ...