இது பாமகவின் தேர்தல் அறிக்கையா? அல்லது பாஜகவின் தேர்தல் அறிக்கையா? என மீண்டும் அட்டைப்படத்தை பார்க்க வேண்டியதாகிவிட்டது! ஒரு வேளை பாஜகவே இதை டிராப் பண்ணி கொடுத்திருக்கலாமோ… என்றும் தோன்றியது! தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி,ஸ்டாலின்,கமலஹாசன் வரை தேர்தல் தேதி ஆரம்பிப்பதற்கு முன்பே தெருத்தெருவாக பிரச்சாரத்தில் இறங்கி செயல்பட, தேர்தல் அறிக்கை நிகழ்விற்கு கூட வெளியே வர பயந்து கொண்டு, காணொலியில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிஜிட்டல் அரசியல் தலைவர்கள் இந்தியாவிலேயே டாக்டர்.ராமதாஸும், அன்புமணி ராமதாதாஸுமாகத் தான் இருப்பார்கள்! பொதுவாக ...

ஜெயிக்கிற கட்சியாகப் பார்த்து தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்து வந்த ராமதாசால் இந்த முறை திமுக கூட்டணிக்குள் நுழைய முடியவில்லை! பாமகவை உறுதியாக சேர்க்கமாட்டோம் என திமுக திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டது! பேச்சுவார்த்தைக்கு கூட தயாராக இல்லை என பாமகவிற்கு உணர்த்தப்பட்டுவிட்டது! இது எந்த தேர்தல் காலத்திலும் பாமக பார்த்திராத அதிர்ச்சியாகும்! ராமதாஸ் நம் கூட்டணிக்கு வருவதால் பலன் கிடையாது என்பது மட்டுமல்ல, பாதகங்களும் அதிகம் என திமுக கணித்துள்ளதாம்! கடந்த பத்தாண்டுகளாக பாமக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணி தோற்பது என்பது எழுதப்படாத ...

தமிழகத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக1980 களின் இறுதியில் பார்க்கப்பட்டவர் ராமதாஸ்! அப்போது அவர் வெறும் சாதி தலைவராக மட்டும் பார்க்கப்படவில்லை! இடதுசாரி சிந்தனையாளராக, பெரியாரிஸ்டாக, அம்பேத்காரை கொண்டாடுபவராக அவர் அறியப்பட்டிருந்த காலம் ஒன்றிருந்தது! தனது கட்சியில் தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடைமுறையில் நிருபித்தவர் அவர்! அவரது எளிமை,சமூக நோக்கு,சமத்துவ போக்கு ஆகியவற்றுக்காக அவர் மதிக்கப்பட்டார்! இதுவே அவரது அடையாளமாகவும் ஆரம்ப காலங்களில் இருந்தது! மக்கள் பிரச்சினைகளுக்காக – சமூக அநீதிகளுக்கு எதிராக – எத்தனையெத்தனையோ போராட்டங்கள், முன்னெடுப்புகள், தெளிவான அறிக்கைகள்…என்று மக்களிடம் ...