இருதயராஜ், திருப்போரூர், செங்கல்பட்டு பி.ஜே.பி எப்போது மத துவேஷத்தைக் கைவிடும்? கசாப்புக் கடைக்காரருக்கு எப்போது ஜீவகாருண்யம் தோன்றும் எனக் கேட்பது போல உள்ளது. பிழைப்பும்,தொழிலும் இது தான் என்றான ஒருவரை மாற்றுவது ரொம்ப கஷ்டம். சுரேஷ் குமார், கும்பகோணம் தஞ்சாவூர் தமிழக அரசும் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாகத் தோன்றுகிறதே? பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடும் அவசியத்திற்கே இடம் கொடுக்கவில்லை! பத்திரிகை முதலாளிகளே சலுகைகள், விளம்பரப் பணத்திற்கு ஆசைப்பட்டு சாஷ்டாங்கமாக விழுந்து தங்கள் சுதந்திரத்தை அடகு வைத்து விடுகின்றனரே! பாலமணி,சென்னை ஆன்மிகம் , அரசியல் மற்றும் ...
யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளர்களாக வரலாம்! அவர்களுக்கு பொது நலன் சார்ந்த நோக்கம் வேண்டும் என்பது ஒன்றே நிபந்தனை. ஆனால், பத்திரிகையாளர் என்பதையே ஒரு அதிகாரமாகவும், தரகு வேலையாகவும், பிடுங்கி தின்னும் பிழைப்பாகவும் பயன்படுத்துவர்கள் இத் துறையில் பெருகி வருவது ஒட்டுமொத்த சமூகத்திற்கே ஆபத்தானது. அந்த வகையில் பிரஸ் கவுன்சில் இதற்கெல்லாம் தீர்வாக அமையுமா என்று பார்க்க வேண்டும். போலி பத்திரிகையாளர்களை களை எடுக்க, பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் புற்றீசல் போல அமைப்புகள் தோன்றுவதற்கு முற்றுபுள்ளி வைக்க, அங்கீகாரமுள்ள பத்திரிகையாளார் அமைப்புகளில் முறையாக தேர்தலை ...