மீண்டும் கொரோனாவா? மிரள வேண்டாம்! எல்லோரும் பயப்படுமளவு ஊரெங்கும் சளித்தொல்லை, ஜலதோஷம், காய்ச்சல் என வாட்டியெடுத்து பாடாய்ப் படுத்துகிறது. இயற்கை மருத்துவம் என்றென்றைக்கும் நம்மை காக்கும் என்ற உறுதியுடன் சில மருத்துவ ஆலோசனைகளை பகிர்கிறேன். தற்போது இந்த கட்டுரையில் நான் தரும் ஆலோசனைகளே கொரானா காலத்தில் பலரை மீட்டுக் கொண்டு வந்தது! ஆகையால், இது யாவருக்கும் பலனளிக்கும்! இயற்கைச் சூழலை நாம் ரொம்பவே கெடுத்து வைத்துள்ளோம்.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஊர் உலகமெங்கும் பருவமழை அது அதற்குரிய காலங்களில் பெய்வதில்லை. ஆனபோதிலும் வரலாறு காணாத ...
நீரிழிவு, என்றழைக்கபடும் சர்க்கரை நோய் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. தொற்றா நோயான இந்நோய் உயிரைப் பறிக்கும் அளவுக்கு மோசமானதா? அந்த அளவுக்கு சர்க்கரை நோய் கொடியதா? ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் சம்பந்தப்பட்டவரை விட்டு விலகாது என்பதும், இது ஒரு பரம்பரை நோய் என்பதும் உண்மையா? இதுபற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்; சர்க்கரை வியாதி என்று சொல்வதைவிட அதை ஒரு குறைபாடு என்று சொல்வதே சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். பொதுவாக ...
யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளர்களாக வரலாம்! அவர்களுக்கு பொது நலன் சார்ந்த நோக்கம் வேண்டும் என்பது ஒன்றே நிபந்தனை. ஆனால், பத்திரிகையாளர் என்பதையே ஒரு அதிகாரமாகவும், தரகு வேலையாகவும், பிடுங்கி தின்னும் பிழைப்பாகவும் பயன்படுத்துவர்கள் இத் துறையில் பெருகி வருவது ஒட்டுமொத்த சமூகத்திற்கே ஆபத்தானது. அந்த வகையில் பிரஸ் கவுன்சில் இதற்கெல்லாம் தீர்வாக அமையுமா என்று பார்க்க வேண்டும். போலி பத்திரிகையாளர்களை களை எடுக்க, பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் புற்றீசல் போல அமைப்புகள் தோன்றுவதற்கு முற்றுபுள்ளி வைக்க, அங்கீகாரமுள்ள பத்திரிகையாளார் அமைப்புகளில் முறையாக தேர்தலை ...
எல்லோரையும் சட்டம் போட்டு முடக்கிவிடறாங்க..ஆனா, கொரோனாவை முடக்க வழி தெரியல! தீர்வு என்ன என்று தெரியாமல் குருட்டாம் போக்கில் ஏதாவது செய்தாக வேண்டுமே என நினைத்து செய்யப்படுவது தான் ஊரடங்கு! ‘’இதுவும் தீர்வாகுமா பார்ப்போமே..’’ என்ற நம்பிக்கையே தடுப்பூசி..! மொத்ததில் சிக்கலை அதிகப்படுத்துகிறோம்! தீர்வை கண்டடைய முடியவில்லை. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் சக்திக்கு மீறி வேலை பார்த்து சோர்வுற்ற வண்ணம் உள்ளனர்! புதிதாக பொறுப்பேற்ற அரசாங்க தலைமையும் சரி, அனைத்து மட்டத்தில் இருப்பவர்களும் சரி பம்பரமாக சுற்றிச் சுழன்று ...
ஒரு பக்கம் பட்டினி வறுமை குறித்த நெஞ்சை கனக்க வைக்கும் செய்திகள், மறுபக்கம் தஞ்சை தரணியில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நனைந்து வீணான செய்திகள்…என இரு வேறு இந்தியாவை பார்க்கிறோம்! ஒரு வாரத்திற்கு முன்பு மதுரை மாவட்ட திறந்த வெளி குடோனில்9,492 மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் நனைந்து வீணான செய்தி,அதைத் தொடர்ந்து,கடலூர்,திருநெல்வேலி…என ஒவ்வொரு இடத்திலும் பாழாகும் நெல்மணிகள் குறித்த செய்திகள்…என வந்து கொண்டே இருந்தன! இந்த ஆண்டு என்றில்லை, ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு சில லட்சம் நெல்மூட்டைகள் ...