சுதந்திர இந்தியாவில் எங்குமே நடந்திராத ஒரு புதிராக புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி இரண்டு மாதங்களாக இன்னும் செயல்படமுடியாமல் – அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்படாமல் – திரிசங்கு சொர்க்கத்தில் உழல்கிறது. என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் இடையே நடக்கும் மெளன யுத்ததின் விளைவே அங்கு இந்த நிலைமை தோன்ற காரணமாகியுள்ளது. புதுச்சேரியை பொறுத்த அளவில் அங்கு தங்கள் ஆட்சியை ஸ்தாபிப்பதன் மூலம் தமிழ்நாட்டு அரசியலுக்கு அடித்தளம் போடலாம் என்பது பாஜகவின் நீண்ட நாள் ஆசை! ஆனால் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்கமுடியாத அளவிலான வாக்கு வங்கி ...

தென் இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளும் ஒரே பிரதேசமாக இருந்த புதுச்சேரி யூனியன் பிரதேசம் காங்கிரசிடமிருந்து கபளிகரம் செய்யப்பட்டுவிட்டது! பாஜகவிற்கு ஒரே உறுத்தலாக இருந்த பாண்டிச்சேரி அதன் பகடை விளையாட்டிற்கு பலிகடா ஆகிவிட்டது! ஆள்பிடிப்பு அரசியலை அகில இந்தியாவெங்கும் அரங்கேற்றி வரும் பாஜக, புதுச்சேரியை மட்டும் விட்டுவைக்குமா என்ன? வட கிழக்கு மாநிலங்கள் அனைத்திலுமே காங்கிரஸில் இருந்து ஆள்பிடித்து ஆட்சி கவிழ்ப்பை அரங்கேற்றியே ஆட்சியை பிடித்தது பாஜக! பீகாரில் கூட்டணியில் இருந்தாலும் ஐக்கிய ஜனதாதளக் கட்சி எம்.எல்.ஏவை அடுத்த மாநிலத்தில் பேர அரசியலுக்கு விலை பேச ...