தில்லி பல்கலைக் கழக மாணவர் உமர் காலிக் படிப்பில் கெட்டிக்காரர். கூடவே சமூக செயற்பாடு களிலும் ஆர்வமுள்ளவர். சிறந்த பேச்சாளர், வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டவர். இவரை உபா சட்டத்தில் சிறையில் தள்ளிவிட்டது பாஜக அரசு! இவர் செய்த தவறு என்ன? “அறிவார்ந்த, இளைஞனான உமர் காலித், கடந்த 20 மாதங்களாக அமைதியாக்கப்பட்டுள்ளார்” என்று, காந்தியின் பேரனான ராஜமோகன் காந்தி, ஒரு காணொளியை இந்த மாதம், அமெரிக்காவிலிருந்து வெளியிட்டுள்ளார். உபா சட்டத்தில், தில்லிச் சிறையில் அடைக்கப் பட்டுள்ள உமர் காலித்திற்கு பிணை இன்னமும் கிடைக்கவில்லை. ...
கள்ளக் குறிச்சி மாணவியின் மரணத்தை அரசு நிர்வாகம் கையாண்ட விதம் தான் அந்தப் பகுதியை இன்று கலவர பூமியாக மாற்றியுள்ளது. செல்வாக்கான நிர்வாகத்திற்கு சார்பாக அரசு நிர்வாகம் இருக்கிறது என்ற தோற்றம் நாளுக்கு நாள் வலுத்த நிலையில் நான்காவது நாள் அது தீவிரம் பெற்று வன்முறை வடிவம் கண்டுவிட்டது. அந்தப் பள்ளியை நடத்துபவர் பாஜகவில் செல்வாக்கு மிக்கவர் என்று சொல்லப்படுகிறது. அதனால், தமிழக அரசுக்கு ஏதேனும் அரசியல் அழுத்தம் தரப்பட்டு இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால், பொதுவாகவே இது போன்ற பிரச்சினைகளில் சக்தி வாய்ந்த ...
இந்தியா முழுமையிலும் தஞ்சை மாணவி மரணம் ஒரு விவாத பொருளாகியுள்ளது. மதமாற்ற நிர்பந்தம் நடந்துள்ளதா? அல்லது தனிப்பட்ட டார்ச்சர் எனும் மனித உரிமை மீறலா ? பொய்யைப் பரப்பி பாஜக தூண்டுகிறதா..? உண்மையில் நடந்தவை என்ன? அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழியின் மகள் லாவண்யா (17) தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தூய இருதய மேல் நிலை பாடசாலை என்ற உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்தார். அவர் தங்கியிருந்த ஹாஸ்டலின் நிர்வாகி ...