மதம், அரசியல் இரண்டுக்குமே உணர்ச்சிகரமான முட்டாள்தனமான கூட்டம் தேவை! அறிவு, உண்மை இரண்டையும் தொலைத்தவர்கள் தான் இவர்களின் தேவை! அது தான் திருமாவளவன் பாஜக விவகாரத்தில் நடந்து கொண்டுள்ளது. இவர் ஏன் 3,500 வருஷத்திற்கு முன்பு சொல்லப்பட்டதை தற்போது பேசுகிறார்? இந்த காலத்தில் யாருக்கு மனுதர்ம நூல் பற்றித் தெரியும்? அதை யாரும் கடைப்பிடிப்பது இல்லையே..சமூகம் அதைக் கடந்து எவ்வளவோ தூரம் வந்துவிட்டதே..தற்போது எந்த இந்து மத சாமியாரும் அதையெல்லாம் பேசுவதில்லை! எந்த ஆண்மகனும் மனுவைச் சொல்லி மனைவியை மிரட்டுவதில்லை! எல்லோரும் அதையெல்லாம் மறந்துவிட்டனர். சமூகம் அடுத்த ...
தமிழகத்தில் மட்டுமல்ல,அகில இந்திய அளவிலும்,ஒரு ஆபத்தான போக்கு தலைதூக்கி வருகிறது! ’’அரசியல் அதிகாரம் பெறுவதற்குச் சாதி அடையாள அரசியலை முன்னெடுக்க வேண்டும்’’ என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளும் அந்த சிந்தனைப்போக்கு தற்போது தலை தூக்கியுள்ளது. அந்தப் போக்கு அதை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்திவிடுமோ… என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது! அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் விசிகவை ஒரு வலுவான சாதி அடையாளத்துடன் கூடிய கட்சியாகக் கட்டமைக்க வேண்டும் எனப் பேசியுள்ளார். அவர் தன் பேச்சில்,எப்படி வன்னியர்களுக்கென்றும்,தேவேந்திரக்குள வேளாளர்களுக்கென்றும், அருந்ததியர்களுக்கென்றும் ...