சோரியாசிஸ்சை சுலபமாக குணப்படுத்தலாம்!

-விஜய் விக்ரமன், MD(siddha)

சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் தற்போது பலருக்கும் வருகிறது.தோலானது செதில் செதிலாக உதிர்ந்து கொட்டும். தோல் வறட்சி,வெடிப்பு, அரிப்பு,  சிவந்து காணப்படும். மரபின் மாறுபாடு, தொடர் மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கங்கள் காரணமாக வரும், இந்நோயை சித்த மருத்துவத்தில் சிரமின்றி குணப்படுத்தலாம்.

காளாஞ்சகப்படை  என்ற சோரியாசிஸ் பெரும்பாலும்  முழங்கை முழங்கால் வயிறு, முதுகு  தலையில்,  காது மடல், போன்ற பகுதியில் காணப்படும்.  சில வகைகளில் தோல் மடிப்பு உள்ள இடங்களில்  மார்பு அடிப்பகுதி, பிட்டம், இடுப்பு மடிப்பு போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. வெகு சிலருக்கு மிக அதிகமாக முழு உடலும் செந்தில் செதிலாக தோல் உரிந்து காணப்படுகிறது.

காரணம்;

இந்த நோய் வருவதற்கு குறிப்பிட்ட காரணம் என்று எதுவும் இல்லை, உடலில் ஏற்படும் அதீத நோய் எதிர்ப்பாற்றலின் செயல் திறன் மாறுபாட்டால் தோளில் உள்ள செல்கள் மிக வேகமாக  வளர்சிதை மாற்றமடைந்து கொட்டுகின்றது   .

தோளில் உள்ள செல்கள்  புதிதாகத் தோன்றி வளர்ந்து  உதிர முப்பது நாட்கள் ஆகும்.  ஆனால், அவ்வாறு இல்லாமல்  இயற்கைக்கு மாறாக  இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மிக வேகமாக வளர்ந்து முதிர்ந்து உதிர்கின்றன.

சிலருக்கு மரபின் மாறுபாடு, தொடர் மன அழுத்தம், முறையற்ற வாழ்வியல் பழக்க வழக்கம், சமச்சீரற்ற முறையில் உடலில்  மிக அதிக புரதசத்து சேர்வதன்  காரணமாகவும்  இந்நோய் ஏற்படுகிறது. முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் காரணமாகவும் இந்த நோய் வரலாம். உதாரணத்திற்கு மீன்,முள்ளங்கி போன்ற உணவுகளை எடுக்கும் போது பால் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

குறிப்பிட்ட நோய்களுக்கு நீண்ட நாட்களாக எடுக்கப்படும் மருந்தின் பக்க விளைவு, கடும் மன உளைச்சல் போன்ற பல  காரணங்களால் இந்நோய் ஏற்படலாம் என நம்பப்படுகிறது.

நோய்க்கான வயது;

பெரும்பாலும் இது  குழந்தை பர்ய்வத்தில் வருவதில்லை. 15-20  வயதுடைய காலங்களில் இருந்து இதன் பாதிப்பை உணரலாம். 50-60  வரை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் இருபாலரும் சரிசமமாகவே இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

அலோபதி மருந்து;

இந்நோயை தீர்க்கக் கூடிய நேரடியான அல்லது சரியான மருந்து இது வரை கண்டுபிடிக்கப் படவில்லை.  இந்நோயினால் ஏற்படும்  குறி குணங்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் துணை மருந்துகளே இதுவரை  உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஸ்டிராய்ட் மருந்துகள் தரப்படுகின்றன. முதலில் கட்டுப்படுவது போல இருந்தாலும், இதனால், காலப் போக்கில் பக்க விளைவுகளும் உண்டாகின்றன.

தீர்வு;-

சித்த மருத்துவத்தில்   மிகச்சிறந்த மருந்துகள் மூலம்  இந்நாய் கட்டுப்படுத்தப்படுகிறது,  பெருமளவில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாத வெளிப்பூச்சு தைலத்தின் மூலமே  பெரும்பகுதி குணப்படுத்தப்படுகிறது.

நாள்பட்ட நோயினருக்கு  சித்த மருத்துவ உடல் தத்துவ  நோயின் அடிப்படையில் ஏற்பட்ட மாறுபாடுகளை  சரி செய்ய உள் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆய்வு நிறுவனம் [ National Institute of Siddha NIS] , பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி,

மேலும், சென்னை, பாளையங்கோட்டை, பாண்டிச்சேரி, திருவனந்தபுரம், பெங்களூரு, திருப்பதி, டெல்லி போன்ற இடங்களில் செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆய்வு   நிறுவனங்கள் [  Central Council for Research in Siddha (CCRS) ]  ஆகிய இடங்களிலும்

மிகச் சிறந்த மருந்துகள் மூலம் முற்றும் இலவசமாகவே  இந்நோய்க்கான  மருந்துகள் வழங்கப்படுகின்றன.

காளாஞ்சகப்படை   என்ற சோரியாசிஸ் நோய்க்கான  மிகச்சிறந்த சித்த மருந்து-

வெட்பாலை தைலம்-

இம்மருந்து மிகச் சிறந்த தீர்வினை எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் வழங்குகிறது,  நோய் உள்ள இடங்களில் வெளிப்பூச்சி தைலமாகவும்,  தேவை எனில் காலை மாலை  உள்ளுக்கும் குறிப்பிட்ட அளவு  சித்த மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் எடுத்துக் கொள்ளலாம்.

பயன்படும் மூலிகை-  வெப்பாலை (Wrightia tinctoria) . இது தமிழகம் எங்கும் காணப்படும் சிறு மர வகையை சார்ந்த  மூலிகையாகும்.  வறட்சியான  இடங்களிலும் இது காணப்படும்.  சித்த மருத்துவர்கள்  உதவியுடன் மிக எளிதில் இதனை கண்டறியலாம்.

மருந்து செய்யும் முறை;

#  ஒரு லிட்டர் சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய்.

#  வெட்பாலை இலை தேவையான அளவு

வெட்பாலை மர இலையை பறித்து, அதனை சுத்தமாக துடைத்து,  இரண்டு இரண்டாக அதனை நறுக்கி, சூரிய ஒளி நன்கு படும் விதமாக வாயகன்ற பாத்திரத்தில் அல்லது தாம்பாளத்தில் போட்டு அதில்  தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும்.  இலைகள் நன்கு எண்ணெயில் மூழ்கும் விதமாக வைக்க வேண்டும்.

[ இலையினை நீரில் கழுவ கூடாது ஈரம் எண்ணெயில் சேரும் போது என்னை கெட்டுப் போக வாய்ப்பு உண்டு]

பாத்திரத்தில் சூரிய ஒளி நன்கு படும் விதமாக இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு வெளியில் வைக்க வேண்டும்.

இலையில் உள்ள பாலானது தேங்காய் எண்ணெயில் கலந்து  முதலில் அடர் நீல நிறமாகவும்  பின்பு இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறும் .  இளஞ்சிவப்பு நிறம் வந்தவுடன்  எண்ணையை வடிகட்டி பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மருந்தினை பத்திரப்படுத்தி  ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

நோய் உள்ள இடங்களின் மீது காலை மாலை இந்த எண்ணெயை தேய்த்துவர நோயின் வீரியம் பெருமளவு  குறையும்.

சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உள்ளுக்கும் வெந்நீர் அல்லது பாலில் கலந்து எடுத்துக் கொள்ளலாம். மிகச் சிறந்த தீர்வையும் தரும்.

பொடுகுக்கு மிகச் சிறந்த மருந்து!

ஆண்கள், பெண்களுக்கு தலையில் ஏற்படும் பொடுகு அரிப்பு போன்ற [Dandruff –    dry skin flake off of the scalp. ] இயல்பான  பிரச்சினைகளுக்கு   தினந்தோறும் தலைக்கு தேய்க்கும் எண்ணையாகவும் இதனை பயன்படுத்தலாம்.

இந்த பதிவு சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டோர்களுக்கு   மட்டுமே.

நாம்  ஒவ்வொருவரும்  அடிப்படையான சில மருந்துகளை உற்பத்தி செய்யும் முறையினை  கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதுவே,  உலகமயமாக்கல் சூழலால் எழுந்துள்ள கொடிய மருத்துவ வணிகத்திடமிருந்து நம்மை காக்கும். நம் தற்சார்பு மருத்துவ அறிவை வளர்த்தெடுக்கும்.

கட்டுரையாளர்; விஜய் விக்ரமன், MD(siddha)

சித்த மருத்துவ செயற்பாட்டாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time