சமமற்ற கொரோனா தடுப்பூசி கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு ஒரு எச்சரிக்கையை பதிவு செய்ததோடு சரி! உலகம் இன்று சர்வதேச கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாறிக் கொண்டு உள்ளது. நான் வெளிப்படையாக பேசுகிறேன். உலகம் தார்மீக ரீதியில் பெரிய தோல்வியைச் சந்திக்கவிருக்கிறது. இந்த தார்மீக ரீதியிலான தோல்விக்கு, ஏழை நாடுகளின் மக்களும், அவர்களின் வாழ்கையும் தான் விலையாகக் கொடுக்கப்படும்” என மூன்று மாதங்களுக்கு முன்பு (ஜனவரி 18, 2021) நடந்த உலக ...

உலகத்திலேயே பல்லாயிரகணக்கான சிறுவர்களை கல் எறிந்த காரணத்திற்காக கடும் சிறை தண்டணைக்கு உட்படுத்தி, சித்திரவதை செய்யும் ஒரே நாடு இஸ்ரேல் தான்! உலகில் மனித நேயமுள்ள எந்த ஒரு மனிதனாலும் இஸ்ரேலின் அரபு முஸ்லீம்களுக்கு எதிரான இதயமற்ற கொடூரங்களை ஏற்கமுடியாது! அப்படிப்பட்ட இஸ்ரேலை காந்தி காலத்திலிருந்து ஏற்க மறுக்கும் நாடாகத் தான் இந்தியா இருந்தது! ஆனால், யூதவெறி கொண்ட இஸ்ரேலை – சதா சர்வ காலமும் அரேபியர்களை வேட்டையாடும் கொடுமையை – ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட பாஜக அரசு கண்மூடித்தனமாக ஆதரித்து வருகிறது…என்றால், இந்த ...

அகிலமெல்லாம் நாகரீகத்தின் உச்சத்திற்கு அடையாளமாக கருதப்பட்ட அமெரிக்கா, டிரம்ப்பின் அதிகார வெறி அத்துமீறல்களால் அநாகரீகத்தின் அடையாளமாக ஒரு கணம் தோற்றம் பெற்றது! வெள்ளை நிறவெறி சித்தாந்த மரபின் தொடர்ச்சியே டிரம்ப்! அந்த மரபின் உயர் அந்தஸ்த்தை நிலை நிறுத்த அவர்களால், ’’நமக்கு ஒரு இண்டர்நேஷனல் ரவுடி தேவை’’ என்ற நோக்கத்திற்காக அதிபராக்கப்பட்டவரே டிரம்ப்!   கறுப்பின பின்புலமும், இஸ்லாமியப் பின்புலமும் உள்ள ஒபாமாவுக்கு நவீன அமெரிக்கா அதிபர் அந்தஸ்த்து தந்து அழகு பார்த்தது! அதுவும் இரண்டு முறை தொடர்ச்சியாக அவர் நீடிக்கவும் முடிந்தது. இது ...