சந்திர சூட் அளவுக்கு சறுக்கியவரல்ல, தலைமை சஞ்சீவ் கண்ணா. சில முக்கியமான விவகாரங்களில் அதிகார மையங்களிடம் அடிபணியாமல் தீர்ப்புகளை வழங்கினார். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பர். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாதவராக வலம் வந்தார்; நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் தீர்ப்புகள் குறித்து அலசுகிறார் ஹரிபரந்தாமன்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் கண்ணா அவர்கள் மே- 13,.2025 அன்று ஓய்வு பெற்றார். இவர் ஆறு மாத காலமே இந்த உயர் பொறுப்பில் இருந்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது, அவரது நியமனம் ...

இளைய தலைமுறைக்கு பாடமாக அமைந்த வழக்கு! இதயத்தின் பாரம் இறக்கி வைக்கப்பட்டது போன்றதொரு உணர்வை பொள்ளாச்சி வழக்கில் தந்துள்ள தீர்ப்பு தந்துள்ளது, தமிழக மக்களுக்கு! ஆனால், இந்த தீர்ப்பு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. பல அரசியல் அழுத்தங்களைக் கடந்து வந்த நீதி; நமது இதயங்களை எல்லாம் உலுக்கி எடுத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறாண்டு கால விசாரணைக்கு பிறகு 9 குற்றவாளிகளுக்கும்  சாகும் வரை சிறை தண்டனை உறுதிபடுத்தப்பட்டு உள்ளது! பெண்களை போகப் பொருளாக கருதியது மட்டுமல்ல, அவர்களை பெல்டால் அடித்து துன்புறித்தி சாடிஸ்ட் ...

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய கட்டாயம் எப்படி உருவானது…? ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களின் தன்மை என்ன? அதிமுக அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்களை விசாரிக்க தடையாக ஆளுநர் இருந்ததை உச்ச நீதிமன்றம் எப்படி பார்க்கிறது…? – நீதிபதி ஹரிபரந்தாமன் அலசல்; மக்களால் தேந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தன் மாநில மக்களின் நலன்களை காக்க இயற்றிய சட்ட மசோதாக்களை நடைமுறைப்படுத்த முடியாமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  எப்படியெல்லாம் தடை போட்டார் என்பது இந்த வழக்கில் தெளிவாக அம்பலப்பட்டது. 2020 ஆம் ஆண்டு ...

நீதிபதிகள் என்பவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படாமல் நெருப்பாக இருக்க வேண்டியவர்கள்! ஆனால், அழுக்கு கறை படிந்த ஆட்சியாளர்கள், நீதிபதிகளை நேர்மையாக இருக்க விடுகிறார்களா? அம்பலப்பட்டு போகும் நீதிபதிகளை ஆட்சியாளர்கள் பாதுகாக்க துடிக்கின்ற சம்பவங்கள் சொல்வதென்ன? தில்லி உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியின் – யஷ்வந்த் வர்மா- வீட்டில் பிடித்த “தீ”யை அணைக்க சென்ற போது அங்கு இருந்த ‘கட்டு கட்டான பணம்’ இன்று பலரையும் திடுக்கிட வைக்கும் “தீ”யாக நாட்டை சூழ்ந்துள்ளது. 1992 ல் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்து 2014ல் நீதிபதியாக அலகாபாத்திலும் பின்னர் 2021ல் ...

நீதிபதிகள் என்பவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சுதந்திர இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் பதவி இழக்க வேண்டிய நிர்பந்தங்களை சந்தித்த நீதிபதிகளை நீதித் துறை கண்டுள்ளது. சில நீதிபதிகள் அவமானங்களை தவிர்க்க தாங்களே ராஜுனாமா செய்ததும் உண்டு. இவை பற்றி அலசுகிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்; டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட  பணக் குவியல் இந்தியா முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. அந்த நீதிபதியின் வீட்டில் தீப்பிடித்த  நிகழ்வில்  ஒரு அறையில் மிகப்பெரிய அளவில் பணக் குவியல் இருந்தது அம்பலமாகிவிட்டது. ஒரு அரசியல் ...

நெருப்பை போல தங்களை தூய்மையாக – ஆசைகள் அண்டாதபடிக்கு –தங்களை வைத்துக் கொள்ள வேண்டியவர்கள் நீதிபதிகள்! ஆனால், அரசியல் சட்டம் அவர்களுக்கு தந்துள்ள அதீத பாதுகாப்பு கவசங்களை தவறாக பயன்படுத்திக் கொண்டு, ‘நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என இறுமாந்து இருப்பார்கள் எனில்… சபாஷ்! அலகாபாத் பார் கவுன்சில் வழக்கறிஞர்களின் அறச் சீற்றத்திற்கு! ”அலகாபாத் நீதிமன்றம் என்ன குப்பைத் தொட்டியா..?” ஒரு நீதிபதியின் இடமாற்றத்தை எதிர்த்து இவ்வாறு கேட்கும் துணிச்சல் என்பது அசாத்தியமானது. டெல்லி உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி யஷ்வந்த் வர்மா ...

ஒரு நள்ளிரவு நேரத்தில் அதிரடி நியமனம்! எதிர்கட்சித் தலைவரின் எதிர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு.. எல்லாவற்றையும் துச்சமாக மதித்து இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதன் பின்னணி என்ன? தேர்தல் ஆணையர் நியமனத்தில் பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ள பதற்றம், அவசரம் சொல்லும் செய்தி என்ன? நாடே அதிர்ந்துள்ளது. தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதில் உள்ள நெறிமுறைகள் தூக்கி வீசி எறியப்பட்டுள்ளன. நியாயமான தேர்தலை உத்திரவாதப்படுத்தும் ஆளுமை இருந்தால் ஜன நாயகத்தின் அஸ்திவாரம் பலப்படும். சார்பு நிலையில் உள்ளவர்கள் இருந்தால் மக்களுக்கு தேர்தல் ஜன நாயகத்தின் ...

உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நியமனங்கள் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. இந்த நியமனங்களில் பார்ப்பனர்களே அதிகமாகவும் பிற உயர்சாதியினர் அதற்கடுத்த நிலையில் அதிகமாகவும் இருப்பதன் பின்னணியில் கடைபிடிக்கப்படும் தந்திரம் என்ன? – நீதிபதி ஹரிபரந்தாமன்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தமிழ்நாட்டில், குறிப்பாக வழக்குரைஞர் மத்தியில்  தற்போது முக்கியமான பேசு பொருளாகியுள்ளது.காரணம்,சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே,  சுமார் 13 காலி பணியிடங்கள் இருக்கையில், 2025 ஆம் ஆண்டில்  எப்போதும் இல்லாத அளவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறுவதை ஒட்டி மேலும் 12 முதல் ...

இந்திய உயர் நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகள் 62 லட்சங்கள்! இதை விரைந்து தீர்க்க தற்போது நிலவும் நீதிபதி பணியின் காலி இடங்களை நிரப்புவதற்கு மாறாக, ஓய்வு பெற்ற நீதிபதிகளை அழைத்து மீண்டும் பதவி தருவது என்பது சரியான அணுகுமுறையாகுமா? இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என அலசுகிறார் ஹரிபரந்தாமன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் அமர்வு ஜனவரி- 30, 2025 அன்று அளித்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி சூரிய காந்த் ...

”பொது இடங்களில் கட்சிக் கொடிகளே கண்ணில் படக் கூடாது” என அதிரடி காட்டுகிறார் நீதிபதி! அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் குறித்து எத்தனை அருவெறுப்பும், அலர்ஜியும் இதில் வெளிப்படுகிறது..! ஜனநாயகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பறிக்கும் வண்ணம் தீர்ப்புகள் தருவதா? ஒரு அலசல்; பல விசித்திரத் தீர்ப்புகள் வரிசையில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் கடந்த ஜனவரி 27ஆம் தேதி அளித்த தீர்ப்பில், ”தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கட்சிகள், சாதி, மதம் ...