13 பேர்  கொல்லப்பட்ட தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறல் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கை மே 18 ந்தேதி முதல்வரிடம் தரப்பட்டது. இந்த மூன்று மாதங்களாக அதை வெளியிடாமல் தாமதப்படுத்தியது ஏன்? இந்த அத்துமீறலுக்கு காரணமானவர்களை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்? ”இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம்” என்று மூச்சுக்கு முன்னூறு தரம் சொன்னார் ஸ்டாலின். ஆனால், தற்போது மூன்று மாதங்களாக  நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றி மூச்சு கூட விடாமல் மறைத்து உள்ளார் என்பது ...

சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் செய்யும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்கொள்வதில் ஏகத்துக்கும் தடுமாறுகிறது திமுக அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை அதன் சொந்த மண்ணிலேயே அதிகாரமற்றதாக்கி, தனி ராஜ்ஜியத்தை நடத்துகிறார் ஆளுநர்! ஒன்றா, இரண்டா? நாளும்,பொழுதும் கலந்து  கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் கிட்டதட்ட கலவரத்தை தூண்டும் வகையில் பேசிக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி! ஒரு கல்விச் சூழலில் அன்பை விதைக்கும் வார்த்தைகளை, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் செய்திகளை, கருத்துக்களை பேசி உற்சாகப்படுத்துவது தான் சிறப்பு விருந்தினரான அவர் ...